மண்டையன் குழு பெயர் வந்த வரலாறு

1-03“பிறேமச்சந்திரனது பூர்வீகம் பற்றி பலர் இப்போது ஆராயந்து கொண்டிருக்கிறார்கள். மண்டையன் குழுத் தலைவன் என்ற பட்டப்பெயர் எப்படி வந்தது என்பது பலருக்குத் தெரியாது” தமிழ் மக்கள் பேரவையில் யாரும் வந்து சேரலாம் என கூவி அழைக்கும் பிறேமச்சந்திரன் இபிஎல்ஆர்எவ் (வரதர் அணி) ததேகூ இல் சேர முன்வந்த போது அதனை மூர்க்கத்தனமாக எதிர்த்தார்! கடந்து ஆண்டு வரவு – செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது அதனை ஆதரிப்பது என ததேகூ முடிவு செய்தது.

ஆனால் அவரது கட்சியைச் சார்ந்த சிவசக்தி ஆனந்தன் நாடாளுமன்றம் செல்வதைத் தவிர்த்துக் கொண்டார். இருந்தும் இன்னொரு நா.உறுப்பினர் மருத்துவர் சிவமோகன் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்! பிறேமச்சந்திரன் தன்னை ஒரு மாபெரும் அரசியல் தலைவர் எனக் கற்பனை செய்கிறார். மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என நடந்து கொள்கிறார்.

திரு சம்பந்தனை கிழவன் என அர்ச்சிக்கிறார். அவரது தம்பி சர்வேஸ்வரனும் அண்ணன் அடிதொட்டு திரு சம்பந்தனை கிழவன் என ஏழனம் செய்கிறார். ததேகூ நடத்தும் கூட்டங்களில் சிவசக்தி ஆனந்தன் திரு சம்பந்தனை தாக்க கதிரை தூக்குகிறார். தேர்தல் முடிந்த பின்னர் திரு சம்பந்தன் ஐயா மருத்துவ பரிசோதனைக்காக தில்லி சென்றார். இது தெரிந்திருந்தும் “சம்பந்தன் எங்கே? அவர் உடனடியாக நாடு திரும்ப வேண்டும்” என பிறேமச்சந்திரன் அறிக்கை விட்டார்.

தமிழ் மக்கள் பேரவைக்கு இணைத் தலைவர்கள் இருந்தாலும் அவர்களை வெறும் பொம்மைகள் போல பிறேமச்சந்திரன் நடத்துகிறார். பேராசிரியர் சிற்றம்பலம் பற்றி செய்தியாளர்கள் இணைத் தலைவர் மருத்துவ நிபுணர் லக்ஸ்மன் அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்ட போது அதற்குப் பேராசிரியர் சிற்றம்பலம் பதில் அளிப்பார் எனக் கூறினார். ஆனால் அதில் குறுக்கிட்ட பிறேமச்சந்திரன் தானே அந்தக் கேள்விக்கு இடக்கு முடக்காக பதில் கூறினார். இவ்வளவிற்கும் உத்தியோகபூர்வமாக பிறேமச்சந்திரனுக்கு எந்தப் பொறுப்பும் தமபே இல் கொடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமபே என்பது உயிருள்ள சடப்பொருள் அல்ல. தமபே வையை விமர்ச்சிப்போர் அதில் பதவி வகிக்கும் ஆட்களையும் அவர்களுக்குப் பின்னால் இருந்து பொம்மலாட்டம் நடத்தும் வன்னியின் எச்சங்களையும் விமர்ச்சிக்கவே செய்வார்கள். அந்த விமர்சனங்களை செரிக்கும் பக்குவம் பிறேமச்சந்திரனுக்கு வேண்டும். பிறேமச்சந்திரனது பூர்வீகம் பற்றி பலர் இப்போது ஆராயந்து கொண்டிருக்கிறார்கள். மண்டையன் குழுத் தலைவன் என்ற பட்டப்பெயர் எப்படி வந்தது என்பது பலருக்குத் தெரியாது. அது எண்பதுகளில் இபிஎல்ஆர்எவ் கட்சியின் ஆயுததாரிகளால் பிடித்து வந்து சித்திரைவதைசெய்யப்பட்ட பொதுமக்களுக்கு தலைமண்டையில் உளியால் துளை போட்டார்களாம்.

முடிவாக “ஆனால் அது சிலருக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதில் யார் எல்லாம் சம்மந்தப்பட்டுள்ளார்கள்? என்பன போன்ற தகவல்களை நாங்கள் பெற்றிருக்கின்றோம்” என்று சொன்னால் மட்டும் போதாது. அதனை எண்பித்துக் காட்ட வேண்டும். காரணம் அது அரசாங்க அதிபர் உட்பட அரச ஊழியர்களது நேர்மைக்கும் மானத்துக்கும் கண்ணியத்துக்கும் விடுக்கப்படும் அறைகூவலாகும். வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி செய்வது என்பது பாரதூரமான குற்றவியல் குற்றம். தேர்தலில் பிறேமச்சந்திரனுக்கு 29,906 வாக்குகளே கிடைத்தன. இது ஆறாவதாக வந்த திரு அருந்தவபாலன் அவர்களுக்கு கிடைத்த வாக்குகளை (42,925) விட 13,019 வாக்குகள் குறைவானது.

பிறேமச்சந்திரனுக்கு வேண்டுவது வாயடக்கம், பணிவு, மூத்தோரை மதிக்கும் பண்பு. இல்லாவிட்டால் அவர் சொல்கின்ற சொற்களே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.