தாய்நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்திக்க வேண்டும்

5019343805896fd4256b4d3c274b3a10_Lதான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு ஓராண்டு பூர்த்தியாகும் இவ்வேளையில் என்னைச் சந்திக்கும் ஊடகவியலாளர் உள்ளிட்ட பெரும்பாலானோர் எதிர்வரும் ஐந்தாண்டுகளின் பின்னர் என்ன செய்யப் போகின்றீர்கள் என தன்னிடம் வினவுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வெவ்வேறு நபர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்காது நம் அனைவரதும் தாய்நாடு எதிர்வரும் ஐந்தாண்டுகளின் பின்னர் எவ்வாறு அமையப் போகின்றது என சிந்திக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் இணைத் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று (06) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பாக இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இந்நாட்டின் பொதுமக்களது எதிர்பார்ப்பான புதிய அரசியலமைப்பினை தயாரித்தல் தொடர்பாக அரசு கவனம் செலுத்திய போதும், அதுபற்றி இதுவரை எந்தவித உத்தியோகப்பூர்வ கலந்துரையாடல் அல்லது யோசனை பெற்றுக்கொள்ளல் இடம்பெறவில்லையெனக் குறிப்பிட்டார்.

ஆயினும் இதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கூற்றுக்களை வெளியிட்டு இனவாதத்தை தூண்டுவதற்கு ஒருசாரார் முயற்சிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, புதிய அரசியலமைப்பு எவ்வகையிலும் இரகசியமாக மேற்கொள்ளும் ஒரு செயற்பாடு அல்ல என்பதை வலியுறுத்தினார்.

வரலாற்றில் முதற் தடவையாக நாட்டின் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்த பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தியின் பங்காளர்களாக தொடர்பு கொள்ளச் செய்வது இவ் ஒருங்கிணைப்பு குழுக்களின் நோக்கமாகும்.

தேர்தல் காலங்களின் போது ஏற்படுத்திக் கொள்ளப்படும் மோதல்கள் மற்றும் அவ்வந்த அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் நாட்டின் பொது அபிவிருத்திக்கான நிகழ்ச்சி நிரலுக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவது இந்நியமனத்தினூடாக எதிர்பார்க்கப்படுவதாக இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி, மேலும் தெரிவித்தார்.

தனது பதவியில் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு இந்த மாதத்திலிருந்தே அர்ப்பணிப்புடன் பணியாற்றுமாறு ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

54 மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவர்களுக்கு இதன்போது ஜனாதிபதி, நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோனும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.