இலங்கைக்கு சகல வழிகளிலும் உதவ பிரித்தானிய தயார் – பிரித்தானிய பிரதமர்

David Cameron at a welfare centre in Jaffnaஇலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்ளும் முயற்சிகளுக்கு முழுமையாக உதவ பிரித்தானியா தயாராகவுள்ளது என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் தெரிவித்துள்ளார்.

நேற்று லண்டனில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பின்போது வடக்கு மற்றும் கிழக்கு உட்பட எல்லா இலங்கையர்களினதும் சுதந்திரத்தையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை பிரித்தானிய பிரதமருக்கு ஜனாதிபதி விளக்கினார்.

பல்வேறு சமூகங்களுக்கு மத்தியில் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட செயலணி குறித்தும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக முன்னர் பயன்படுத்தப்பட்டு வந்த பொதுமக்களின் காணிகளை மீளக்கையளிப்பதில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் ஜனாதிபதி பிரித்தானிய பிரதமருக்கு விளக்கினார்.

அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர் டேவிட் கெமரோன், இலங்கையின் புதிய முன்னேற்றப் பயணத்தைப் பாராட்டினார். ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் புதிய சூழல் குறித்து தனது திருப்தியை அவர் வெளிப்படுத்தினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.