இந்தியா இலங்கை மீது சகலதுறைகளிலும் அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறதாக தெரிவிக்கிறார் யாழ் இந்திய துணைத்தூதர் எ.நடராஜன் ………

இந்தியா இலங்கை மீது சகலதுறைகளிலும் அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வருவதாக யாழ் இந்திய துனைத்தூவர் எ.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்
இந்தியா இலங்கை மீது அரசியல் பொருளாதார கலை கலாச்சாரம் என சகல துறைகளிலும் முக்கியத்துவத்தை பேணி வருகின்றது.
குறிப்பாக இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த வருடம் இலங்கையின் வடக்கு பகுதிக்கு வந்தது இதுவே முதல் முறை.
மேலும் போருக்கு பின்னர் இலங்கை தொடர்பாக உட்கட்டமைப்பு புனரமைப்பு என சில திட்டங்களை வகுத்துள்ளதுடன் அதில் ஏராளமானதை முடித்தும் விட்டது. குறிப்பாக இந்தியன் வீட்டுத் திட்டம் புகையிரத பாதை புனரமைப்புகள் என பல திட்டங்களை செயற்படுத்தியுள்ளது.
அத்துடன் வருங்காலத்தில் யாழ்ப்பாணத்தில் 1.2 பில்லியன் செலவில் பிரம்மாண்டமான கலையரங்கொன்றையும் கட்டவுள்ளது.இதனை விட மன்னார் திருக்கேதிஸ்வர ஆலய புனரமைப்புக்களை 326 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கவுள்ளதுடன் யாழ் துரையப்பா விளையாட்டரங்கு 146 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருகின்றது.
கல்வித்துறை ரீதியில் வருடா வருடம் புலமைபரிசில் வழங்கப்பட்டு வருகின்றதுடன் அவை அதிகரித்தும் வருகின்றன.
கலைகலாச்சரங்களை வளர்க்கும் வகையிலும் எமது தூதரகத்தால் பயிற்சி வகுப்புகளும் நடாத்தப்பட்டு வருகின்றன.
மேலும் தொழிநுட்ப பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தினுடாக வடக்கை சேர்ந்த 25 அதிகாரிகள் குறுகியகால பயிற்சியை  பெற்று நாடு திரும்பியுமுள்ளனர்.
மேலும் வடக்குமாகாணத்துடனான வர்த்தக பொருளாதார வளர்ச்சி தொடர்பாக உச்சக்கட்ட முக்கியத்துவத்தை கொடுத்து வருகின்றது.
அந்தவகையில் சிறிய சிறிய தொழில்களை அமைக்க ஏற்பாடு செய்துள்ளோம். வவுனியாவில் 30 ஆயிரம் மல்லிகை செடிகளை நாட்டியுள்ளோம் அத்துடன் அடுத்த கட்டமாக 10 ஆயிரம் செடிகளை யாழ்ப்பாணத்திலும் நடுவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம்.
இதேவேளை இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் சிறிய பிரச்சனை ஒன்று உள்ளது. அதாவது மீனவர் பிரச்சனை இப் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். ஆனால் அதற்கு  மனிதாபிமான ரீதியில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: வேங்கை jaffna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.