பெண்களிடம் மர்ம உறுப்பை காட்டிய ஆசாமி அகப்பட்டார்….!

arrest1-300x170பாதையில் சென்ற இளம்பெண்களிடம் தனது மர்ம உறுப்பினை காட்டிய இளைஞர் ஒருவரை கல்பிட்டிய பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கல்பிட்டிய, குரக்கன்ஹேன பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது நண்பிகளுடன் பாதையோரமாக குறித்த பெண் நின்றுக்கொண்டிருந்த வேளையிலேயே சந்தேக நபர் இவ்வாறு அநாகரிகமாக நடந்துக் கொண்டதாக தெரிவித்து குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், குறித்தப் பெண்ணிடம் காதல் தொர்பினை ஏற்படுத்தும் முகமாக தனது தொலைப்பேசி இலக்கத்தை வழங்கியதாகவும் அதைத்தவிர்த்து தவறாக தான் நடந்துக் கொள்ளவில்லையென சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.