பணத்திற்கு ஏமாந்து சிறுநீரகத்தை இழந்த தொழிலாளி

upcountry-a-3தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்தில் வசிக்கும் இராமசாமி மகேந்திரன் வயது 53 என்ற நபர் கடந்த 8 வருடங்களுக்கு முன் தனது சிறுநீரகத்தை அருகில் உள்ள தோட்டமான ட்ரூப் தோட்டத்தில் வசிக்கும் நபர் ஒருவருக்கு வழங்கியுள்ளார்.
ஒன்றரை இலட்சம் ரூபா சன்மானமாக வழங்குவதாக கோரியே இந்த சிறுநீரகத்தை பெற்ற அந்த நபர் வெறும் பத்தாயிரம் ரூபாவை மாத்திரம் வழங்கியுள்ளார்.
இவ்வாறு பணத்திற்காக ஏமாந்த மகேந்திரன் இன்று தொழில் .இன்றி நோய்வாய்பட்டு படுக்கையில் இருக்கின்றார்.
தனது 4 பிள்ளைகளில் ஒருவர் வறுமையின் காரணமாக கொழும்புக்கு வேலை தேடி சென்றிருக்கும் அதேவேளை தனது மனைவி (சின்னையா விஜயகுமாரி – வயது 35) மத்தியகிழக்கு நாடு ஒன்றுக்கு தொழில் நிமித்தம் சென்று இன்று வரை 10 மாதங்கள் ஆகின்றது.
உடைந்த வீட்டில் வாழ வசதியின்றி உணவுக்காக திண்டாடும் மகேந்திரன் தனது மனைவி அனுப்பும் பணத்தில் உயிர் வாழ்ந்து வருகின்றார்.
இவ்வாறான அவல நிலையில் ஒரு தோட்டப்பகுதியில் வாழும் நபர் தனது சிறுநீரகத்தை பறிகொடுத்து பணத்திற்காக ஏமாந்துள்ளார்.
தனது பிள்ளைகளின் ஒருவரான பெண் பிள்ளை இன்று அல்லது நாளை பருவமடையும் நிலையில் இருக்கின்றார். இவரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் தனது மனைவி வெளிநாடு சென்றிருப்பதாகவும் வாழ்வாதாரத்தை உறுதி செய்து வீட்டை கட்டியமைக்க வசதிகளை ஏற்படுத்தவும் மனைவி கூறி சென்றுள்ளதாக மகேந்திரன் தெரிவித்தார்.
தனது மனைவியின் அம்மாவான செல்லமா என்பவரின் வீட்டில் உணவு உண்டுக்கொண்டு பாடசாலை செல்லும் தனது பிள்ளைகளை பராமரித்துக்கொண்டு இக்கட்டான சூழ்நிலையில் துர்பார்க்கிய நிலையில் வாழும் மகேந்திரன் ஆரம்ப காலத்தில் பெருந்தோட்டத்தில் வேலை செய்து தற்பொழுது உடம்பில் சத்து குறைவானதன் காரணமாக தொழில் இன்றி கூழி வேலை செய்து கொண்டிருக்கின்றார்.
சமீபத்தில் தலவாக்கலை நகரில் அமைந்துள்ள கதிரேசன் ஆலயத்தில் மண்டப வேலைக்கு சென்ற அவர் தவறி விழுந்து கை ஒன்று உடைந்த வண்ணம் நோய்வாய்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் இவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளதாகவும் தலையில் அடிப்பட்டதால் சுயநினைவுடன் செயலாற்ற முடியாத துர்பார்க்கிய நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளார். அதேவேளை தனது சிறுநீரகத்தை இழந்ததன் காரணமாக தனது உடம்பில் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் உடம்பு சத்து இழந்த நிலையில் வாழந்து வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றார்.
குடும்ப வருமானம் வறுமை காரணமாக தனது சிறுநீரகத்தை கொடுத்ததாகவும் பணம் கிடைத்தால் அன்றாட வாழ்க்கையை உறுதி செய்ய முடியும் என்ற நோக்குடனும் உதவி என்ற ரீதியில் வழங்கிய சீறுநீரகத்திற்கு சன்மானம் கிடைக்காத காரணத்தினால் ஏமாந்து போன நிலையில் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
அதுதேவேளை இவ்வாறான செயல்களில் மலையகத்தை சேர்ந்தவரக்ள் ஈடுப்பட கூடாது எனவும் தனது சிறுநீரகங்களை விற்க வேண்டாம் எனவும் அவர் அங்கலாயிகின்றார்.
தனது சிறுநீரகத்தை வழங்கும் வேளையில் வைத்திய செலவுகளை சிறுநீரகம் பெற்றவர்கள் செய்து வந்தாலும் எனக்கான சன்மானத்தை வழங்க வில்லையே பசப்பு பேச்சுகளை பேசி என்னை அவர்களின் வழிக்கு கொண்டு வந்து இந்த சிறுநீரகத்தை வகையாக பெற்றுக் கொண்டனர். சிறுநீரகம் பெற்றுக்கொண்டவர் இன்று நல்ல நிலையில் இருக்கின்றார் சிறுநீரகத்தை கொடுத்த நான் இந்த நிலையில் இருக்கின்றேன்.
மீண்டும் அவரிடம் பணம் தொடர்பாக கேட்டபொழுது உங்களுடைய வைத்திய செலவை நானே தான் முன்னெடுத்தேன். ஆகையால் இப்பொழுது என்னிடம் பணம் இல்லை. வசதி இருக்கும் பொழுது உதவி செய்கின்றேன் என மறுதளித்தார். எனவே இவ்வாறான சூழ்நிலையில் குடும்ப சுமையினை தாங்கி கொண்டு வாழும் மகேந்திரனை போல ஏனையவர்களும் அவதிப்படக் கூடாது என்பது எங்களின் கருத்தாகும்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.