பிரதேசத்தையே சோகத்துக்கு உள்ளாக்கிய சிறுவனின் மரணம் நடந்தது என்ன? அவிழாத முடிச்சுக்கள்.

ecffad0d-a054-434d-9a4b-68c1f3cf847011சம்பூர் பகு­தி­யையே சோகத்­துக்­குள்­ளாக்­கி­யுள்ள ஆறு வயதுப் பால­க­னான குகதாஸ் தரு­ஷனின் மர­ணத்தின் மர்­மத்தை மருத்­துவ அறிக்­கைகள் மூலமோ அல்­லது விசா­ரணை அறிக்­கைகள் மூலமோ முழுமையாக கண்டு பிடிக்­கப்­பட முடி­யாத நிலையில் பல்­வேறு சந்­தே­கங்கள், ஊகங்கள் எழுந்­துள்­ளன.

இதே­வேளை சிறு­வனின் மரணம் தொடர்பில் உட­ன­டி­யான முடி­வுக்கு வர­மு­டி­ய­வில்லை. அத்­துடன் தேவை­யான ஆதா­ரங்­களை திரட்­டி­யதன் பேரிலும் பல்­வேறு பரி­சோ­த­னை­க­ளையும் ஆய்­வு­களை மேற்­கொண்­டதன் பேரி­லுமே மர­ணத்­துக்­கான கார­ணத்தைக் கூற முடியும் என திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லையின் இர­சா­யனப் பகுப்­பாய்வு மற்றும் மருத்­துவ ஆலோ­ச­க­ரான டபிள்யூ.ஆர்.கே.எஸ்.ராஜபக் ஷவும் மருத்­துவப் பணிப்­பாளர் டாக்டர் எஸ்.சதுர்­மு­கனும் தெரி­வித்­தனர்.

மேலும் மூன்று கிலோ எடை­யுள்ள கல்லை சப்­பாத்துக் கட்டும் பட்­டியை நெஞ்சில் கட்­டி­ய­படி கிணற்­றுக்குள் இருந்து எடுக்­கப்­பட்ட சிறு­வனின் மரணம் எவ்­வாறு இடம்­பெற்­றன உட­ன­டி­யாக தீர்­மா­னிக்க முடி­யாத நிலை காணப்­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. விசா­ர­ணை­களின் பின்பே இறப்­புக்­கான கார­ணத்தைக் கூற­மு­டி­யு­மென மருத்­துவ அறிக்­கை­களும் மரண விசா­ரணை அதி­காரி மற்றும் பொலி­ஸாரின் புலன் விசா­ர­ணை­களும் தெரி­விக்­கின்­றன.

இச்­சம்­பவம் பற்றி தெரி­ய­வ­ரு­வ­தா­வது

அண்­மையில் மீள்­கு­டி­யேற்­றப்­பட்ட சம்பூர் 7 ஆம் வட்­டா­ரத்தைச் சேர்ந்த செல்­வ­ரட்ணம் குகதாஸ் மற்றும் ஜெய­வாணி ஆகி­யோரின் மூன்­றா­வது புத்­தி­ர­னான குகதாஸ் தருஷன் கடந்த திங்­கட்­கி­ழமை தனது அண்­ண­னு­டனும் அயல் வீட்டு நண்­ப­னு­டனும் மாலை 5 மணி­ய­ளவில் விளை­யாடிக் கொண்டு இருந்­துள்ளான். பக்­கத்து வீட்டு சிறுவன் தன் வீட்­டுக்குச் சென்று விட்டான். இவ­னு­டைய அண்ணன் கடைக்குச் சென்று விட்ட நிலையில் இச்­சி­றுவன் தனி­மையில் விடப்­பட்­டுள்ளான்.

நேரம் சென்றும் தனது மகனைக் காண­வில்­லை­யென பெற்றோர் தேடி­யுள்­ளனர். தேடிய நிலையில் மகனைக் காணாத கார­ணத்­தினால் அய­லவர், பொலிஸார், உற­வி­னர்­களை அழைத்துக் கொண்டு பெற்றோர் மகனைத் தேடி­யுள்­ளனர். சந்தேகத்தின் பேரில் வீட்­டுக்கு சற்றும் தூர­மா­க­வுள்ள பாது­காப்பு அற்ற கிணற்­றுக்குள் தேடி­யுள்­ளனர். மாலை பட்­டு­விட்ட கார­ணத்­தினால் வெளிச்­சத்தின் உத­வி­யுடன் பார்த்­த­போது சிறுவன் குப்­புற கிணற்­றுக்குள் இருப்­பது கண்­டு­கொள்ளப்பட்டுள்ளது.

பெற்­றோரும் ஏனை­ய­வர்­களும் பதற்­ற­ம­டைந்து சிறு­வனின் உடலை எடுக்க முயன்ற போதும் சுழி­யோடி ஒரு­வரின் துணை கொண்டு எடுக்க வேண்­டிய நிலை­யேற்­பட்­டது. அத்­துடன் மரண விசா­ரணை அதி­கா­ரிக்கும் பொலி­ஸா­ருக்கும் அறி­விக்­கப்­பட்­டது. மர­ண­வி­சா­ரணை அதி­காரி ஏ.ஜே.ஏ. நூருள்ளா சம்­பவம் நடை­பெற்ற இடத்­துக்கு வந்த பின் சுழி ஓடி­யொ­ரு­வரின் துணை கொண்டு சிறு­வனின் உடல் கிணற்­றுக்குள் இருந்து மீட்­கப்­பட்­டது.

சிறு­வனின் நெஞ்சில் மூன்று கிலோ எடை­யுள்ள கல் கட்­டப்­பட்ட நிலையில் குப்­புற இருந்த சடலம் திங்கள் இரவு 12.10 மணிக்கு மீட்­கப்­பட்­டது. மரண விசா­ரணை அதி­காரி இது கொலை­யாக இருக்­க­லா­மென சந்­தே­கப்­பட்­டதன் பேரில் மூதூர் நீதி­மன்ற நீதவான் ஐ.என்.ரிஸ்­வா­னுக்கு தெரி­விக்­கப்­பட்­டது.
மூதூர் நீதி­மன்ற நீதிவான் மற்றும் மரண விசா­ரணை அதி­காரி ஆகி­யோரின் ஆலோ­ச­னையின் பேரில் பிரேதப் பரி­சோ­த­னைக்­காக செவ்வாய் காலை திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லைக்கு சிறு­வனின் சடலம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

சிறு­வனின் மரணம் பற்றி திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லையின் இர­சா­யனப் பகுப்­பாய்வு மற்றும் மருத்­துவ ஆலோ­ச­க­ரான டபிள்யூ. ஆர்.கே.எஸ்.ராஜபக்ஷவு­டனும் மருத்­துவப் பணிப்­பாளர் டாக்டர் எஸ்.சதுர்­மு­க­னு­டனும் தொடர்பு கொண்டு கேட்­ட­போது சிறு­வனின் மரணம் தொடர்பில் உட­ன­டி­யான முடி­வுக்கு வர­மு­டி­ய­வில்லை என்று தெரி­வித்­தனர்.

அத்­தடன் தேவை­யான ஆதா­ரங்­களை திரட்­டி­யதன் பேரிலும் பல்­வேறு பரி­சோ­த­னை­க­ளையும் ஆய்­வு­களை மேற்­கொண்­டதன் பேரி­லுமே மர­ணத்­துக்­கான கார­ணத்தைக் கூற­மு­டி­யு­மெனக் குறிப்­பிட்­டுள்­ளனர்.
சம்­பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் கருத்துத் தெரி­விக்­கையில் சிறுவன் மூச்சுத் திணறி இறந்­தாரா அல்­லது திட்­ட­மிட்ட முறையில் படு­கொலை செய்­யப்­பட்­டாரா? என்ற உட­னடி முடி­வுக்கு விசா­ர­ணை­களின் பின்பே வர­மு­டி­யு­மென தெரி­வித்­துள்­ளனர்.

சிறுவன் மூன்று கிலோ எடை­யுள்ள கல்லை தனது நெஞ்சில் கட்­டி­யி­ருக்க முடி­யாது. கட்­டப்­பட்ட முடிச்சும் பின்­பு­றத்தில் கட்­டப்­பட்­டுள்­ளது. கல்லு கட்­டு­வ­தற்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட சப்­பாத்து பட்டி மிகவும் உறு­தி­வாய்ந்­தது. சாதா­ரண மக்கள் பாவிக்கும் லேஸாக தெரி­ய­வில்லை. கொலை செய்­யப்­பட்ட பின் கல்­லுக்­கடி கிணற்­றுக்குள் தூக்கிப் போடப்­பட்­டானா? அல்­லது உயி­ருடன் கல்­லுக்­கட்டி கிணற்­றுக்குள் போடப்­பட்­ட­தனால் மூச்சுத் திணறி இறந்­தானா என்­பது மர்­ம­மா­க­வுள்­ளது.

எவ்­வாறு இருந்த போதிலும் இது ஒரு திட்­ட­மிட்ட கொலை­யாக இருக்க வேண்டும். பாது­காப்­பற்ற கிணற்­றடிப் பக்கம் அச்­சி­றுவன் மாலை வேளையில் செல்­வ­தற்கு சந்­தர்ப்பம் இல்லை. அது­வு­மன்றி மேற்­படி கிணறு கடற்­படை முகா­முக்கு அருகில் குடி­யேற்­ற­வாசி ஒரு­வரின் வீட்டுக் கிணறு என சம்பூர் மக்கள் உறவினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அத்துடன் சிறுவனின் உடலை பரிசோதனைப்படுத்தியபோது எவ்வித படுகாயங்களோ அல்லது மாற்று நிலை பயன்களுக்கோ அவர் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரியவில்லையென தெரிவித்துள்ளனர்.

ஐந்து வயதைப் பூர்த்தி செய்த இச்சிறுவன் சம்பூர் மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு சேர்க்கப்பட்டு இன்னும் ஒரு மாதம் கூட கடக்கவில்லை. மருத்துவப் பரிசோதனைகளின் பின் நேற்று காலை 11.30 மணியளவில் சிறுவனின் சடலம் சம்பூர் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.