முல்லைத்தீவு மாவட்டம் நட்டாங்கண்டல் பகுதியில் நேற்று அதிகாலையில் இருவருக்கிடையில் மோதல் கத்தி வெட்டில் முடிந்தது.

முல்லைத்தீவு மாவட்டம் நட்டாங்கண்டல் பகுதியில் நேற்று அதிகாலையில் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதல் கத்தி வீட்டில் முடிந்தது.ஒருவரின் சடலம் நடு வீதியில் கிடந்த்தோடு மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  குறித்த சம்பவத்தில் ச.சந்திரகுமார் அகவை 33 என்னும் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவரே  வெட்டிப் படு கொலை செ ய்யப்பட்டுள்ளார்.முல்லைத்தீவு மாவட்டம் பாண்டியன்குளம் பிரதேச செயலாளர் பிரிவில் நட்டாங்கண்டல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கிடையில் இடம்பெற்ற கை கலப்பானது கத்தி வீட்டில் முடிந்துள்ளது. இதனால் அதிகாலையில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட அதே நேரம் பிறிதொருவர் காயமடைந்த நிலையில் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இவ்வாறு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டவரின்  சடலம் நேற்றுக் காலை 11 மணிவரையில் வீதியில் கிடந்தமையினால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து அதுவரை தடைப்பட்டிருந்த்து.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிசார் சடலத்தை மீட்டு உடற் கூற்றுப் பரிசோதனைக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.-

Recommended For You

About the Author: வேங்கை jaffna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.