இரண்டு அகவை சிறுமி நஞ்சருந்திய நிலையில் நேற்றைய தினம் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி…..

இரண்டு அகவை சிறுமி நஞ்சருந்திய நிலையில் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி மாவட்டம் ஜெயபுரத்தைச் சேர்ந்த கௌசிகா என்னும் இரண்டு அகவைச் சிறுமியே நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவது ,ஜெயபுரத்தில் பேத்தியாரின் பராமரிப்பில் வாழும் இரண்டு அகவை சிறுமி அயல்வீட்டிற்குச் சென்ற சமயம் தோட்டத்திற்கு விசுறும் கிருமிநாசினியை அருந்தினார் எனத்தெரிவித்தே குறித்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.அவ்வாறு அனுமதிக்கப்பட்ட சிறுமி அருந்தினார் என்று கூறும் கிருமி நாசினியின் போத்தலும் வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட போதிலும் சிறுமியுடன் பேத்தியார் மட்டுமே வைத்தியசாலைக்கு சமூகமளித்திருந்தார். சிறுமியின் தாயார் தொடர்பில் மாறுபட்ட தகவல்களையும் வழங்கினார்.குறித்த சம்பவங்களை ஆராய்ந்த  வவைத்தியசாலையின் விடுதி வைத்தியர்கள் சிறுமி அருந்தியதாக தெரிவிக்கப்பட்ட கிருமி நாசினி தொடர்பிலும் தமது கவனத்தை செலுத்தினர். இவ்வாறு அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்திய வைத்தியசாலைத் தரப்புக்கள் சிறுமியின் எதிர்காலம் கருதி குறித்த    விடயத்தினை கிளிநொச்சி பொலிசாரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இதேவேளை சிறுமியின் உடல்நிலை தொடர்ந்தும் மோசமான நிலையில் காணப்பட்டதனால் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.-

Recommended For You

About the Author: வேங்கை jaffna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.