பிரதேச செயலரருக்கு தண்ணி காட்டிய அரசியல் வாதி…..

நிவாரணப் பொருள் விநியோகத்திற்கு பொருளை விநியோகிக்குமாறி கூறி பிரதேச செயலாளருக்கே போலிக் காசோலை ஒன்றினை வழங்கி ஏமாற்றினார் குடாநாட்டின் உண்ணாவிரத அரசியல்வாதி ஒருவர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பகுதியில் யுத்த நிறைவின் பின்னர் குடாநாட்ல் உலாவரும் புதிய அரசியல்  வாதி ஒருவர் 2013ம் ஆண்டு  துணுக்காய் பகுதிக்கு சென்றுள்ளார்.குறித்த பிரதேசத்தை பார்வையிட்டவர் தாம் ஓர் அமைப்பினை நடாத்துவதாகவும் அதற்கு கிடைத்த பணத்தில் இப் பகுதி மக்களிற்கு உதவி புரிய விரும்புவதாக பிரதேச செயலாளரை நாடியுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை பிரதேச செயலாளரும் மேற்கொண்டு வழங்கியுள்ளார்.
மறுநாள் பிரதேச செயலாளரை தொடர்பு கொண்ட அரசியல் வாதி என்பவர் இவர்களுக்கான பொருட்களை யாழில் இருந்து கொண்டுவந்து வழங்கும்போது செலவு அதிகமாகும் அதனால் இங்கு கொள்வனவு செய்து வழங்க தீர்மாணித்துள்ளோம் அதனால் ஓர் வர்த்தக நிலையத்தில் சிபார்சு செய்து பொருட்கை வாங்கித்தாருங்கள் அப் பொருட்களை இன்றே மக்களிற்கு விநியோகம் செய்த பின்பு யாழ்.சென்றவுடன் உங்கள் பணத்தினை அனுப்பி வைக்கின்றேன் என கூறியுள்ளார்.குறித்த வார்த்தையினை நம்பிய பிரதேச செயலாளர் மல்லாவி நகரில் பிரபலமான வர்த்தக நிலையத்திற்குச் சென்று ரூபா 5 லட்சத்து 80 ஆயிரம் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்து வழங்கியுள்ளார்.அப்பொருட்களை மக்களுக்கு விநியோகித்த புது அரசியல்வாதி அதற்கான பணத்தினை மூன்று மாதமாக வழங்கவே இல்லை. பணத்திற்கு பொறுப்பு நின்ற பிரதேச செயலாளர் பல தடவை தொடர்பு கொண்டதன் பயணாக நான்காவது மாதம் ஓர் நிறுவனத்தின் பெயரிலான கடித்த் தலைப்பில் ஓர் கடிதம் எழுதி அதனுடன் குறித்த நிவாரணப் பொருளின் பெருமதியான 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாவிற்கான ஓர் காசோலையை அனுப்பி வைத்துள்ளார்.இவ்வாறு வழங்கப் பட்ட காசோலையுடன் அரசியல்வாதி என கூறுபவரினால் வழங்கிய கடித்த்தினால் தற்போதுதான் எமது நிறுவனத்திற்கு பணம் கிடைத்தமையினால் சிறிது தாமதம் ஏற்பட்டுவிட்டது எனவும் குறிப்பிட்டிருந்தார்.காசோலையை பெற்றுக் கொண்ட பிரதேச செயலாளர் வங்கியில் சமர்ப்பித்த வேளையில் குறித்த காசோலைக்குரிய கணக்கில் பணம் இல்லை என்ற விடயம் தெரிவிக்கப்பட்டது. அதன் பிற்பாடு காசோலையின் திகதி காலாவதியாகும் வரையில் பல தடவைகள் வங்கியை தொடர்பு கொண்ட மிரதேச செயலாளர் ஏமாற்றம் அடைந்தார்.இவ் விடயம் தொடர்பில் உரையாட அரசியல்வாதியை தேடி இரண்டு ஆண்டுகள் அலைந்தும் இன்றுவரை    அரசியல்வாதி தொடர்பு பொள்ளவே இல்லை என்பதனால் அண்மையில் தனது மனைவியின் தாலிக்கொடியினை விற்றுப் பிரதேச செயலாளர் கடைக்குரிய பணத்தினை செலுத்தியுள்ளார்.-

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.