மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இப்படியும் நடக்குதாம்

hospital_aமட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் இரண்டு எக்ஸ்ரே இயந்­தி­ரங்கள் சுமார் இரண்டு வரு­டத்­துக்கும் மேலாக பயன்­ப­டுத்­தப்­ப­டாமல் தேக்கி வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக மேற்­படி வைத்­தி­ய­சாலை குழு உறுப்­பினர் மைக்கல் பத்­ம­நாதன் தெரி­வித்தார்.
மட்டு. போதனா வைத்­தியசாலையில் காணப்­படும் நிலைமை குறித்து தகவல் தரு­கையில் அவர் மேலும் கூறி­ய­தா­வது,
இவ்­வைத்­தி­ய­சாலை மட்­டக்­க­ளப்பு மாவட்ட மக்­க­ளுக்கு மட்­டு­மன்றி திரு­கோ­ண­மலை மற்றும் அம்­பாறை மாவட்ட கரை­யேரப் பகு­தியில் வாழும் தமிழ் பேசும் மக்­க­ளுக்கும் சேவை செய்யும் முக்­கிய நிறு­வ­ன­மாகும். இம்­மக்­களின் நன்மை கருதி அவுஸ்­தி­ரே­லி­யாவில் புலம்­பெ­யர்ந்து வாழும் தமி­ழர்கள் இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் இரண்டு எக்ஸ்ரே இயந்­தி­ரங்­களை அனுப்பி வைத்­தனர். இவற்றில் ஒன்று பயன்­பாட்­டுக்­கா­கவும் மற்­றை­யது பயன்­ப­டுத்­தப்­படும் இயந்­தி­ரத்­துக்கு உதி­ரிப்­பா­கங்கள் தேவைப்­பட்டால் பெறு­வ­தற்­கா­கவும் வழங்­கப்­பட்­டது. ஆனால் இவை இன்­று­வரை பயன்­ப­டுத்­தப்­ப­டாமல் தேக்கி வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.
எக்ஸ்ரே இயந்­தி­ரத்தின் மூலம் எடுக்­கப்­படும் படங்­களைக் கழு­வு­வ­தற்கு தலா 13 இலட்சம் ரூபா செலவில் இரண்டு இயந்­தி­ரங்கள் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளன. இவற்றில் ஒன்று பயன்­ப­டுத்­தப்­ப­டாமல் வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. மற்­றை­யது உருண்டு செல்லும் சக்­கரம் உடைந்த நிலையில் உள்­ளது. 26 இலட்சம் ரூபா பணத்தை இவ்­வாறு முடக்­கி­யி­ருக்க வேண்­டிய அவ­சியம் இல்லை.
இந்த நிதியைப் பயன்­ப­டுத்தி மிக அத்­தி­யா­வ­சி­ய­மான ஸ்கேன் இயந்­தி­ரத்­துக்கு தேவை­யான உதி­ரிப்­பா­கத்தை வாங்கி வைத்­ தி­ருக்­கலாம்.
எனவே, நோயா­ளர்­க­ளுக்கு தங்கு தடை­யின்றி திருப்­தி­க­ர­மாக வைத்­திய சேவையை வழங்­கு­வ­தற்­காக இவ்­வா­றான குறை­பா­டு­களைப் போக்க சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் தமது திற­மையைப் பயன்­ப­டுத்த வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான குறைபாடுகள் இடம்பெறாமல் இருப்பதற்கும் ஆவன செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதிகளும் போதனா வைத்தியசாலையில் தமது கவனத்தைத் திருப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.