பயங்கரவாத தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகரின் இறுதி ஊர்வலம்

12790899_10208816564355591_5673504540008971023_n-768x576 12789706_10208811349505223_380152961_o-768x1024வவுனியா மற்றும் வடமாகானத்தில் நீண்ட சேவை அனுபவம் உடைய பயங்கரவாத தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் கணபதிப்பிள்ளை வடிவேலு அவர்களின் இறுதி கிரியைகள் வவுனியாவில் பூரண பொலிஸ் மரியாதையுடன் நீதிபதி அன்னலிங்கம் பிறேம்சங்கர் முன்னிலையில் நடைபெற்றது.

இவர் இறுதி யுத்தத்தில் சரணடைந்த 13 ஆயிரம் முன்னால் போராளிகளின் விடுதலைக்கு உதவியவர் என விடுதலையான முன்னாள் போராளிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி , துன்னாலையில் பிறந்த கணபதிப்பிள்ளை வடிவேலு பல்வேறு அழுத்தங்களின் மத்தியில் பணியாற்றியவர்.

தனது சேவை காலத்தில் யாழ் குடா நாட்டில் சேவை செய்ய வேண்டும் என்ற ஆவலுடன் புதிய அரசு தனக்கு இடமாற்றம் யாழ் குடாநாட்டில் தரும் என எதிர்பாத்திருந்த பொலிஸ் அதிகாரி தனது இறுதி ஆசை நிறைவேறாமலே தனது சேவை காலத்தில் மாரடைப்பால் மரணமானார்.

வவுனியா மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக்குறைவே பொலிஸ் அதிகாரியின் மரணத்திற்கான காரணம் எனத் தெரிய வருகிறது.

2 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட பொலிஸ் அதிகாரி அதிகாலை 4 மணிவரை உயிருக்கு போராடியும் மருத்துவர்களோ தாதியர்களோ உறக்கத்தில் இருந்ததாகவும் அங்கு இருக்கும் அவசர சிகிச்சை பரிவு உபகர்னங்கள் இயங்கா நிலையில் இருந்ததாகவும் தெரிய வருகிறது.

பொலிஸ் அதிகாரியின் பூதஉடல் 208 சிவன் கோவில் வீதி உக்கிலான்குழம் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் சும்மார் ஆயிரம் வரையான வடமகானத்தின் பல பகுதியில் இருந்தும் வருகைதந்த பொலிசார் இறுதி அஞ்சலி செலுத்த இறுதி ஊர்வலம் அவரது இல்லத்தில் இருந்து ஆரம்பமாகியது.

அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகான சபை உறுப்பினர்கள் , பிரதெச சபை உறுப்பினர்கள் , தமிழ் ஆயுதக் குழுக்கள் , பல நூறு அரச அதிகாரிகள் , முப்படையினர் , முன்னாள் போராளிகளும் , பொதுமக்களும் , எனப் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி செலுத்தினர்.

பயங்கரவாத தடுப்பு பிரிவில் சேவையாற்றிய காலத்தில் தவறு செய்யாதவர்கள் தண்டிக்கபடகூடாது என்பதற்காக பல அழுத்தங்களை சுமந்து சேவையாற்றியவர். ஒரு பல்கலைக்கள பட்டதாரியான இவர் பல்வேறு அரசியல் குறுக்கீடுகளால் பதவி உயர்வுகளில் இருந்து இலங்கை அரசின் அரசியல் பளிவாங்கல்கலில் பாதிக்கபட்டவர்.

இவருடைய சேவைக்கு கொடுக்கபட்ட அரசியல் அழுத்தங்களுக்கு எதிராக சந்திரிக்கா ஆட்சி காலத்தில் , சுட்டுக் கொலை செய்யபட்ட அமைச்சர் தி.மகேஸ்வரன் பாராளுமன்றம்வரை சென்று உரையாற்றி இருந்தமை குறிப்பிடதக்கது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.