தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம்

20012650அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு சாகாமம் வீதியில் அமைந்துள்ள கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயத்துக்கு முன்னால் உள்ள புளியம்பத்தை கிராமத்தில் வீடொன்றின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கங்காதரன் கோகுலன் (23வயது) என்ற இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த இளைஞனின் தாய் வெளிநாடு ஒன்றிற்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளதாகவும், தகப்பன்யிரிழந்துவிட்டதாகவும் உயிரிழந்தவர் அவரது சகோதரனுடன் வசித்து வந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவ தினத்துக்கு முதல் நாள் திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் பாட்டியின் வீட்டில் இருவரும் சாப்பிட்டுவிட்டு கோகுலன் வீட்டின் அறையில் தூங்கியதாகவும் இளைய சகோதரன் மண்டபத்தில் தூங்கியதாகவும் மறுநாளான நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணியளவில் கோகுலனின் நண்பர் ஒருவர் வந்து அவரைக் கேட்ட போது அண்ணனிடம் செல்வதற்காக அறைக்கு சென்ற போது நைலோன் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டதாகவும் அதனையடுத்து பொலிஸாருக்கு தெரிவித்ததாகவும் இளைய சகோதரன் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்துக்கு சென்ற மரணவிசாரணை அதிகாரி விசாரணை நடத்தியதுடன் பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.