
மனைவி வீட்டில் இருந்து சென்ற பின்னர், கள்ளக் காதலியுடன் வீட்டில் இருந்த போது, மனைவியின் தம்பியிடம் பிடிபட்ட கணவன் பற்றிய சம்பவம் ஒன்று குருணாகல், பொல்கஹாவல பிரதேசத்தில் நடந்துள்ளது.
தாய் சுகவீனமுற்று குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தாயுடன் தங்கியிருக்க குறித்த நபரின் மனைவி சென்றுள்ளார்.
எனினும் தாய்க்கு எடுத்துச் செல்ல வேண்டிய சில ஆடைகளை மறந்து வீட்டில் வைத்து விட்டுச் சென்றதால், தம்பிக்கு அறிவித்து அதனை எடுத்து வருமாறு கூறியுள்ளார்.
உடைகளை எடுக்க தம்பி தனது அக்காவின் வீட்டுக்கு சென்ற போது, அக்காவின் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை கண்டு ஆத்திரமடைந்த தம்பி, அக்காவின் கணவரை கதிரை ஒன்றினால், தாக்கியுள்ளார்.
இவர்கள் சண்டையிடுவது அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு கேட்டு, அவர்கள் வந்து சண்டையை தீர்த்து வைத்துள்ளதாக தெரியவருகிறது.