வாழைச்சேனையில் ஜனா மீது சரமாரித் தாக்குதல்

janaவாழைச்சேனை மீராவோடை புதுவருடவிளையாட்டு விழா 20/04/2016 புதன்கிழமை மீராவோடையில் இடம்பெற்றது. இந்தநிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்தியும்,கிழக்குமாகாண ரெலோ உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் எனும் ஐனாவும் கலந்து கொண்டனர்.

முதலில் முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி உரையாற்றினார்.

அவர் தமது உரையில் கடந்தகாலத்தில் தாம் மேற்கொண்ட தமிழ்தேசிய அரசியல்பணிகள் அதனூடாக தமக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அதனால் தாம் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தாம் தமிழ்தேசிய அரசியல்பணிகளையும் மாவீர்ர் களின் தியாத்தினையும் வெகுவாக பாராட்டி பேசினார் இதனால் ஜெயானந்தமூர்த்தியின் பேச்சுக்கு மக்கள் பாராட்டுதலும் கைதட்டல்களும் இடம்பெற்றன பொன்னாடை மாலைகளும் ஜெயானந்தமூர்த்திக்கு வரவேற்பை கொடுத்தன.

இவரின் பேச்சுக்கு அடுத்தபடியாக மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஐனா) உரையாற்றினார் அவரும் ஜெயானந்தமூர்தியின்பாணியில் தாமும் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடியதாகவும் அதனாதான் சிலகாலம் பிரித்தானியாவில் புலம்பெயர நேர்ந்ததாகவும் கூறினார்.

இதைகேட்டுக்கொண்டிருந்த ஒரு இளைஞன் மேடையில் திடீரென ஏறி அவரின் ஒலிவாங்கியை பறித்து ஐனாவின் களுத்தை பிடித்து இளுத்து நீர் விடுதலைப்புலிகளை காட்டிக்கொடுத்துத்தான் லண்டன் போனீர் உமக்கு மாவீர களையும் புலிகளையும் கதைக்க எந்த தகுதியும் இல்லை 2009 மேமாதம் புலிகள் மௌனித்த பின்பு தான் நாட்டுக்கே வந்தாய் உன்னைபற்றி உமது ரெலோவை பற்றி எப்படியானவர்கள் என்பது எங்களுக்கு தெரியும் நீர் புலிகளைபற்றி தமிழ்தேசியத்தைபற்றி கதைக்காமல் உமது மாகாணசபையைபற்றி கதையும் என கூறுனார்.

உடனே ஜனா தர்ம சங்கட நிலையில் மேடையில் இருந்து இறங்கியதை நேரடியாக காணமுடிந்தது.

ஜனா தாமும் ஒரு தேசிநவாதியென பலமுறை காட்டமுயன்றாலும் மட்டக்களப்பு மக்கள் இவரின் கடந்தகால துரோகத்தை இன்னும் மறப்பதற்கில்லை என்பதை இந்த சம்பவம் கோடிட்டுக்காட்டியது.

இந்த நிகழ்வில் ஜெயானந்மூர்திக்கு அமோகவரவேற்பும், ஜனாவுக்கு ஏனோதானோ என்ற வரவேற்பும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

ஜெயானந்த மூத்தி ஆயுதக் குழுக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருந்தவர் கல்குடா வீர மறவர்களின் இரத்தத்தால் சிவந்த மண் இங்கு அம்மறவர்களை வதைத்த ஆயுதக்குக்கள் 2009இன் பின் தலை எடுத்து விட்டன எனவே இவற்றை அப்புறப் படுத்த வேண்டும் என தன் ஆதரவாளர்களிடம் சென்ற நாள் தொடக்கம் கூறிவரும் நிலையில் இத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.