இந்திய மீனவர்கள் இன்று விடுதலை

fishermanஎல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 86 இந்திய மீனவர்கள்; இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இலங்கையின் எல்லையினைத் தாண்டி மீன்பிடித்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பிலும் முல்லைத்தீவு கடற்பரப்பிலும் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் நீதிமன்றங்களின் உத்தரவுக்கு அமைய இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். எனினும் இன்று இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் நிலையில் நல்லெண்ண அடிப்படையில் குறித்த 86 மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் 43 இந்திய மீனவர்களும் திருகோணமலையில் 43 மீனவர்களும் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *