கிளிநொச்சியில் தியாகதீபம் திலீபனின் நினைவு நிகழ்வு

14b53e6547dd1182f9acdc9b4f366f8dதியாகதீபம் லெப்ரினன்ட் கேணல் திலீபனின் 29 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியினரின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில், ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து பன்னிரு நாட்கள் உண்ணாவிரதமிருந்து வீரச்சாவைத் தழுவிய தியாகதீபம் திலீபனது உருவப்படத்திற்கு விளக்கேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர், தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி, பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து திலீபன் உண்ணாவிரதமிருந்து வீரச்சாவை தழுவினார்.
தியாக தீபத்தின் மரணம் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வு. தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி, தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பிய நிகழ்ச்சி, பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனட்சாட்சியை தீண்டிவிட்ட தியாகத்தை தியாக தீபம் திலீபன் புரிந்துள்ளான்.
அவனது இறப்பு ஏன் ஒரு மகத்தான நிகழ்சியாக மக்கள் எல்லோரையும் எழுச்சி கொள்ளச்செய்த ஒரு புரட்சிகர நிகழ்ச்சியாக அமைந்தது திலீபன் உங்களுக்காக இறந்தான் உங்கள் உரிமைக்காக இறந்தான் உங்கள் மண்ணுக்காக இறந்தான்,
உங்கள் பாதுகாப்பிற்காக சுதந்திரத்திற்கா கௌரவத்திற்காக இறந்தான். தான் நேசித்த மக்களுக்காக தான் நேசித்த மண்ணுக்காக ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னத தியாகத்தை செய்யமுடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத்தான் அவன் செய்திருக்கின்றான்.
ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன் ஆனால் உயிரினும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம் என தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் ஈகைச்சுடர் லெப்ரினன் கேணல் திலீபன் நினைவாக தெரிவித்துள்ளார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.