விழுங்கப்பட்டு வரும் முல்லைத்தீவின் உண்மையான துயர நிலை !

mullaitivu-280916-380-seithyகடந்த யுத்தத்தின் போது கடுமையாக பாதிக்கப்பட்ட வடக்கின் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் விபரங்கள் மற்றும் வறுமை கோட்டின் கீழ் வாழும் சிறுவர்கள் உட்பட அனைவரது புள்ளிவிபரங்களை முல்லைத்தீவு பிரதேச சபை தெரிவித்துள்ளது.

அதன் படி போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட கரைதுரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் 1914 உள்ளதாக பிரதேச செயலகப் புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தாய்தந்தையரை இழந்த 83 சிறார்களும் 2055 முதியோரும் 574 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வசித்து வருவதாக பிரதேச செயலகப்புள்ளி விபரங்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை 574 மாற்றுத்திறனாளிகளில் 211 பேருக்கு மட்டுமே சிறுதொகை மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றதாக பிரதேச செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.