
யாழ் இந்திய துணைத் தூதரகம் மற்றும் அகில இலங்கை காந்தி சேவா சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்று க்கிழமை நல்லூர் துர்க்காமணி மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் சர்வதேச அகிம்சாதினம் கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வில் இந்தியாவில் இருந்து வருகைதந்த பேராசிரியர் ஜெயந்தி ஸ்ரீ பாலகிருஷ்ணனின் “அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் ” எனும் சிறப்புரை இடம்பெற்றது. அத்துடன் யாழ்ப்பாணக் கலைஞர்களின் சிறப்புக் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மேலும் காந்தி சேவா சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கலைநிகழ்வுகளை நிகழ்த்திய கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீ.ஆனந்தசங்கரி வடக்கு கிழக்கு மாகாணசபை முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள், வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா வடமாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி, இந்திய துனைத் தூதர் ஆர். நடராஐன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ். இளங்கோவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.