
42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேனவுடன் – வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டார்
ஆரம்ப விழாவை வட மாகாண முதலமைச்சர் பகிஸ்கரித்திருந்த நிலையிலேயே இன்று தேசிய விளையாட்டுப் போட்டியின் நிறைவு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த 29 ஆம் திகதி முதல் 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் பல்வேறு தடகளப் போட்டிகள் இடம்பெற்றன.
தேசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆரம்ப விழாவை பகிஸ்கரித்திருந்த வட மாகாண முதலமைச்சர் இன்றைய தினம் நிறைவு விழாவில் கலந்துகொண்டிருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
இந்த வைபவத்திற்கு முன்னதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்புத் திட்டத்தையும் ஆரம்பி த்து வைத்தார்.