நீர்வேலி சிறுமியை தாக்கிய தாய்: வழக்கு விசாரணையில் நடந்தது என்ன..!!

screen-shot-2016-10-07-at-13-27-33யாழ்.நீர்வேலி பகுதியில் தாயொருவர் ஆறுவயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை மிக மூர்க்கத்தனமாக தாக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டது.

இவ்வீடியோ பதிவேற்றப்பட்டு, சில மணித்தியாலங்களிலேயே சிறுமியைத் தாக்கிய தாய், பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்;ப்படுத்தப்பட்டு, நேற்று வியாழக்கிழமை (06) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் தனது 6 வயதுடைய சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று வியாழக்கிழமை (06) உத்தரவிட்டார்.

நீர்வேலிப் பகுதியிலுள்ள தோட்டக் காணியில், சிறுமியொருவரை பெண்ணொருவர் கத்தியினால் மிகமோசமாகத் தாக்கும் காட்சி அடங்கிய வீடியோ, கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி காலை, முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இவ்வீடியோ பதிவேற்றப்பட்டு, சில மணித்தியாலங்களிலேயே சிறுமியைத் தாக்கிய தாய், பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்;ப்படுத்தப்பட்டு, நேற்று வியாழக்கிழமை (06) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.