நோர்வேக்கும் அமெரிக்காவுக்கும் சேது கொடுத்த ஆலோசனையை ஆமோதித்தார் கோதபாய

screen-shot-2016-10-08-at-08-33-17ஜ.நா கூட்டத்தொடருக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால நியூயோக் செல்ல முதல் அமெரிக்காவின் மறைமுக ஆலூசனைபடி நோர்வே அரசு NORAD ஆய்வு மையத்தில் அண்மையில் ஒரு இலங்கையின் எதிர்காலம் தொடர்பான ஒரு புலனாய்வு செய்யும் கூட்டத்தை நடாத்தி இருந்தது.

இந்த கூட்டத்தில் நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் உட்பட பல சர்வதேச முக்கியஸ்தர்களல் கந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் இலங்கையின் புலனாய்வு தகவலாளன் சேது உட்பட பலரும் கலந்து தமது எதிர்கால இலங்கை தொடர்பாக புலனாய்வு தகவல்களை வெளியட்டனர்.

நோர்வே அரசு இலங்கையில் தமது பணத்தை பல ஆயிரம் கோடிகளை முதலிடமுதல் இந்த ஆய்வு கூட்டத்தை நடாத்தி இருந்தது.

பலரும் பல ஊகங்களை வெளியட்டனர் ஆனால் இயல்பாகவே கூட்டங்களில் அமைதியாக பார்வையாளராக இருக்கும் சேது தனு புலனாய்வு தகவல்களை வெளியிட்டார்.

”இலங்கையின் 2015ம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன என்பது எமக்கு 2011ம் ஆண்டு தெரிந்திருந்தது”. கடந்த 23 வருடமாக SLFP தலைவரே இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் gotabayaஉள்ள ஜனாதிபதியாக இருந்து வருகிறார். குறித்த SLFP கட்சியின் தலைவராக இருப்பவரே கடந்த 23 வருடமாக ஜனாதிபதியாக இருந்து வருவதாலும் இந்த நிலை 2020 வரைக்கும் தொடரும் என்பதாலும் 2020ம் ஆண்டு இலங்கையின் SLFP ஒரு கட்சியின் ஆட்சிக் கொள்கை 27 வருடங்களை தாண்டி செல்லும் மீண்டும் 2020ம் ஆண்டு கோதபாய றாஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று SLFP தலைவராவார் ஆகவே அந்த நிலை அடுத்த 8 வருடங்களுக்கு சென்றாலும் கிட்டதட்ட 35 முதல் 50 வருடங்களுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையினையும் முப்படைகளையும் அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதி என்ற அதிகார கதிரை குறித்த SLFP கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும். இது சிரியா , வியட்ணாம் , பர்மா மற்றும் பல ஆபிரிக்க பின்தங்கிய நாடுகளின் நிலையை நோக்கி நகருகிறது ஆகவே நோர்வே இந்த ஆபத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார்.

குறித்த சேதுவின் புலனாய்வு ஆய்வு அறிக்கையை ஆமோதித்து இண்று கோதபாய றாஜபக்ச சிங்கள ஊடகத்திற்கு இது தொடர்பான ஆரூடம் வெளியட்டுள்ளார். அவர் வெளியிட்ட கருத்தை அப்படியே தருகிறோம்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தகுதிகளும் தனக்கு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் முழுமையானஆசிர்வாதம் கிடைக்கப்பெற்றால்தான் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு தாம் களமிறங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே கோத்தாபய ராஜபக்ச இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் இடமில்லை என்று சுட்டிக்காட்டிய கோத்தாபய ராஜபக்ச, புதிய முகமொன்றை களமிறக்குவதற்கும் தயங்கப்போவதில்லை என்றும் சபதமிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அரசியலில் பிரவேசிப்பது குறித்து தாம் இதுவரை இறுதி தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள கோத்தாபய ராஜபக்ச, மக்களுக்காக சேவை செய்வதற்கு அடுத்தகட்ட யோசனை தொடர்பில் சிந்தித்துவருவதாகவும் கூறியுள்ளார்.

ஜோன் கெரியின் குற்றச்சாட்டை மறுத்தார் மைத்திரிபாலசிறிசேன!

z_p09-john-kerryசிறீலங்காவில் தற்போது ஆட்சியிலிருக்கும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி தொடர்பாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வெளியிட்ட குற்றச்சாட்டினை அக்கட்சியின் தலைவரும், சிறீலங்காவின் அதிபருமான மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

சிறீலங்காவில் நல்லிணக்கம் தாமதமடைவதற்கு சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவியுள்ள இனவாதக் கொள்கையே காரணம் என ஜோன் கெரி குற்றம் சுமத்தியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்குப் பயணம் செய்திருந்தார்.

இந்நிலையில், அவரின் அமெரிக்கப் பயணத்தின் ஓரங்கமாக அமெரிக்க இராஜாங்கச் செயலரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார்.

இதன்போது, புதிய அரசியலமைப்பு உருவாக்கம், அதிகாரப் பரவலாக்கம் மற்றும் யுத்தக் குற்ற விசாரணை தொடர்பாக முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லையென ஜோன் கெரி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்திருந்தார்.

இதற்கு, மைத்திரிபாலசிறிசேன தலைமையில் உள்ள சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் உள்ளக இனவாத நிலமையே காரணம் எனவும் குற்றம் சுமத்தியிருந்தார்.

ஜோன் கெரியின் குற்றச்சாட்டை முற்றாக மறுத்த மைத்திரிபால சிறிசேன, சிறீலங்காவின் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்தும் விடயங்களை தேசிய அளவில் முன்னெடுக்கமுடியாது என ஜோன் கெரிக்கு மைத்திரிபால சிறிசேன விளக்கமளித்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.