ஒட்டுசுட்டான் சிவன் கோவிலில் சிர்கேடுகளோடுகள்

temple01இலங்கையின் மிகப் பிரசித்தி பெற்ற ஒட்டுசுட்டான் தான்றோன்றி ஈஸ்வரர் கோவில் அண்மைக்காலமாக மிகுந்த சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் அப் பகுதியை சேர்ந்த மக்கள் சங்கமம் பஞ்சாயத்தில் தொடர்பு கொண்டதன் பின்னர் எமது செய்திப் பிரிவினர் ரகசியமான முறையில் தகவலை திரட்டியிருந்தனர் .

இதனடிப்படையில் நேர்த்தியற்ற நிர்வாகத் திறனுடன் ஒட்டுசுட்டான் தான்றோன்றி ஈஸ்வரர் கோவில் இயங்கிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

கோவிலின் புனிதத்தன்மை அற்று அழுக்கு கறைகளால் பல இடங்கள் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது .இது தொடர்பில் நாங்கள் சென்ற நேரம் கோவிலுக்கு சென்ற ஒரு சில மக்களிடம் பேசிய போது முல்லை மாவட்ட சுகாதாரப் பிரிவினரும் இவ் விடயங்களை கண்டுகொள்ளவில்லை என்றும் கோவில்வி நிர்வாகம் இது தொடர்பில் கேட்டால் உமக்கு கேட்க தகுதியில்லை என்று சொல்கிறர்கள் என்றார்கள்.

எனவே இது தொடர்பில் இன்னும் பல ஆதாரங்கள் எம்மிடம் இருக்க கூடிய நிலையில் இப்போது சில சுகாதார சிர்கேடுகளுடன் காணப்படும் கோவில் வளாகத்தின் புகைப்படங்களை வெளியிடுகிறோம் .

எனவே இவ்வாறு சுகாதார சீர்கேடு ஊழல்கள் ,ஏமாற்று நடவடிக்கைளில் ஈடுபடுபவர்கள் ,மற்றும் பொது இடங்களில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் , பெண்களோடு சேஷ்டை புரிபவர்கள் யாராக இருந்தாலும் சங்கமத்தின் பஞ்சாயத்தில் உள்வாங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.தொடரும் திருந்தா விட்டால் சங்கமத்தின் பஞ்சாயம் மாற்றும் .

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.