வவுனியாவின் சிவசேனைக்கும் இந்தியாவின் சிவ்சேனாவுக்கும் தொடர்பில்லை

ISIS_in_SLவவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிவசேனை இயக்கத்துக்கும் இந்தியாவில் இயங்கிவரும் சிவ்சேனா இயக்கத்துக்கும் தொடர்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் வவுனியாவில் சிவசேனை என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.

ஏனைய மதங்களில் இருந்து இந்து மதத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பை வழங்கும் பொருட்டே இந்த அமைப்பு நிறுவப்பட்டதாக அதன் முதன்மை ஏற்பாட்டாளர் மரவன்புலவு சச்சிதாநந்தன் த ஹிந்துவுக்கு தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தியாவின் சிவசேனா அமைப்பு தமக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது அமைப்பு மதமாற்றங்களுக்கு எதிராக செயற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம், சிவசேனை அமைப்பை நிறுவுவதற்கு முன்னர், இந்தியாவின் சிவ்சேனா, ஆர்எஸ்எஸ், விஎச்பி மற்றும் கோஆவை தளமாகக்கொண்ட ஹிந்து ஜாக்ருதி சமத்தி என்பவற்றுடன் கலந்தாலாலோசனைகளில் ஈடுபட்டதாகவும் சச்சிதாநந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தமது அமைப்புக்காக பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டபோதும் இறுதியில் சிவசேனை என்ற பெயரை தெரிந்தெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.