அநுராதபும் அம்மன் கோவில் மீது சிங்களவர்கள் தாக்குதல் ஒருவருக்கு வாள் வெட்டு !!!

image-468-300x189கலைமகள் விழா நாளான நேற்று அநுராதபுரம் பழைய நகரத்திலுள்ள முத்துமாரி அம்மன் கோயில் தாக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவசேனை அமைப்பு அறிவித்துள்ளது. இந்துக்களின் நூற்றாண்டு கால வழிபாட்டிடம். நவராத்திரி விழாவான நேற்று 11ம் திகதி விசயதசமி ஏடு துவக்கும் நிகழ்வு மாலை 06 மணியளவில் நடந்து கொண்டிருந்த போது நவராத்திரி விழாவுக்கு வந்த இந்துக்களை விரட்டியுள்ளதுடன் விழாவைக் கலைத்ததாக சிவசேனை அமைப்பின் தலைமை ஓருங்கிணைப்பாளர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இந்துக்களைக் கோயிலிலிருந்து விரட்டினர். கருவறைக்குள் தப்பி ஓடிய ஒருவரைத் துரத்தினர். கருவறைக்குள் சென்றனர். இந்து ஒருவரைப் பௌத்தர், இசுலாமியர் இருவருமாகக் கத்தியால் வெட்டினர். படுகாயமுற்ற இந்துவின் உயிர் ஊசலாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருவறையில் நாகதம்பிரான், நாகபூசணி கற்சிலை இருந்தது. அவர்கள் அச்சிலையை உடைத்துமுள்ளனர். இந்துக்கள் மீதான மூன்று சமயத்தவர் இணைந்து தாக்கியதை இலங்கை சிவசேனை வன்மையாகக் கண்டிக்கிறது. 25 மாவட்டங்களில் வாழும் இந்துக்கள் சார்பிலும் உலக இந்துக்கள் சார்பிலும் கண்டிக்கிறது. இந்துப்பெருமக்கள் உடனடியாக மாற்றுச் சிலையை அனுப்புமாறும் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.