ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

14691081_10154465242486327_5287542319619071789_nஎவ்விதமான எதிர்பார்ப்புகளோ நிபந்தனைகளோ இன்று சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிரான சவால்களின் போது ஒத்துழைப்புகள் வழங்கிய ரஷ்யா மற்றும் சீனாவிற்கும் நன்றிகளை தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரு தரப்பு நட்புறவைகளை வலுப்படுத்த குறித்து இரு நாட்டு தலைவர்களுடனா சந்திப்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இலங்கைக்குத் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பிரிக்ஸ் – பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போதே ஜனாதிபதி புடின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்ற ரஷ்ய ஜனாதிபதி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரஷ்யா இலங்கைக்கு வழங்கிய நிபந்தனையற்ற ஒத்துழைப்புக்காக ஜனாதிபதி சிறிசேன இதன் போது நன்றி தெரிவித்தார் , மேலும் இந்த நட்புறவை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.

இதே வேளை , சீன ஜனாதிபதி ஷிங் பிங் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான சந்திப்பும் இடம்பெற்றது.

நட்புறவு நாடுகள் என்றவகையில் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இதன்போது இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவுக்கு 60 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வு குறித்தும் இதன் போது பேசப்பட்டது.

இலங்கையில் வேகமாக பரவிவரும் சிறுநீரக நோயை ஒழிப்பதற்கு சீன அரசாங்கம் வழங்கிவரும் உதவிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

மொரகாகந்த அபிவிருத்தித் திட்டத்திற்காக சீன அரசாங்கம் வழங்கிவரும் பங்களிப்பினை பாராட்டிய ஜனாதிபதி, இலங்கையின் மூலோபாய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சீன அரசாங்கத்தின் உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் பெரும் பலம்பொருந்தியவையாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையே ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளை மேலும் விஸ்தரிப்பது தொடர்பாகவும் சீன – இலங்கை தலைவர்கள் விரிவாக ஆராய்ந்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.