4 லட்சம் பெறுமதியான மரகுற்றிகள் பிடிபட்டன

kilinochi-720x480கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதலின் போது, 4 லட்சம் ரூபா பெறுமதியான மர ற்றிகள் கைப்பற்றப்பட்டன.

கிளிநொச்சி பொலிஸாரிற்கு கிடைத்த தகவலையடுத்து, முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வெலிக்கன்ன தலைமையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தேடுதலின் போது, ஐவரை கைது செய்த பொலிஸார், மரக்குற்றிகளையும், அதனை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் ஒன்றையும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றினர்.

மேலும், மரக்குற்றிகள் எடுத்து செல்லப்பட்ட மரக்காலை அனுமதிப்பத்திரம் இல்லாமல் இருந்தமையால், குறித்த மரக்காலையில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களையும் பொலிஸார் மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணைகளில் ஈடுபட்டுவரும் பொலிஸார், விசாரணைகளின் பின்னர் கைது செய்த ஐவரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.