எப்படி மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்யலாம் ?

தமிழ் இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளவும் அவர்களது சொந்த உரிமைக்காக யுத்தம் செய்வதையும் தேர்ந்தெடுத்தது எதனால் ? – மெலனி திசநாயக்கா
எப்படி மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்யலாம் ?

Bilderesultat for விடுதலைப்புலிகளின்
————————————————————————————————————————————————————————————
(சட்டத்தரணி மெலனி திசநாயக்கா அவர்கள் உயிரணை நூல் வெளியீட்டில் ஆற்றிய ஆங்கில உரையினை தமிழாக்கம் செய்து தந்த துளசிச்செல்வன் அவர்களுக்கு நன்றிகள்)
சிங்கள பெண் சொல்லுவது —
இந்த பேச்சின் கடைசிப்பகுதியை பதிவிடுகின்றேன்

ஏன் ஆதித்தன் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்தான் ?

அவன் ஒரு பயங்கரவாதியா ? ஆதித்தனைப் போன்ற இளைஞர்கள் தமிழ் இனத்தை இன அழிவிலிருந்து காப்பதற்கு ஆயதம் எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அவன் தமிழ்த்தாய் நாட்டின் இழந்து போன சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்காக மட்டுமே போரிட்டான். இது எப்படி பயங்கரவாதமாக இருக்க முடியும் ?

எப்படி மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்யலாம் ?

இலங்கையரசாங்கம் ஒரு லட்சத்து நாற்பதினாயிரத்துக்கும் அதிகமான தமிழ்மக்களைக் கொன்று ஒரு இரத்தம் தோய்ந்த முடிவையே போரின் மூலம் வழங்கியிருக்கிறது.

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த பல விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஈவிரக்கமற்று கொல்லப்பட்டார்கள். ஏனையவர்கள் சித்திரவதைகளுக்கும் பாலியல் வல்லுறவகளுக்கும் ஆளானார்கள். இவைகள் எல்லாம் பயங்கரவாதம் இல்லையா ? ஏன் மேற்கு நாடுகள் இப்போதும் மௌனமாயிருக்கிறார்கள் ?

தமிழ்மக்கள் அவர்களது சொந்த உரிமைக்காகவும் சொந்த சுதந்திரத்துக்காகவும் போரிட்டார்கள். வுpடுதலைப்புலிகளே தமிழ் மக்களது ஒரேயொரு பிரதிநிதிகளாகவும் இருந்தார்களே தவிர பயங்கரவாதிகளாக அல்ல.

தமிழ்மக்கள் சிங்கள மக்களைப் போலவே சுதந்திரத்துடன் கூடிய அமைதியான வாழ்க்கையை வாழ்வதற்கு நிறையவே உரிமை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் எல்லா வழிகளிலும் எங்களுக்கு (சிங்களமக்களுக்கு) சமமானவர்கள்.

உண்மையில் இனவாத சிங்கள அரசாங்கம் தான் பயங்கரவாதிகளாகவும் போர்க்குற்றவாளிகளாகவும் இருக்கிறார்கள்.

எந்தவொரு உண்மையான பௌத்தனும் நல்ல சிங்களக்குடிமகனும் இன அழிப்பைச் செய்த கடந்தகால தற்கால இலங்கை அரசுடன் ஒருபோதும் ஒத்துப்போகப் போவதில்லை.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருக்கும் வேளையில் நாங்கள் கட்டாயம் இந்தப் போராட்டத்தை தொடர வேண்டும். இதுவே நாங்கள் தொடர்ந்து அரசியல் ரீதியாகவும் சமாதான வழியிலும் சுதந்திரத்துக்காக போரிடுவதற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

ஆதித்தன் கதை என்னை மாற்றிவிட்டது. இது தமிழ் மக்களின் விடுதலைப் போருக்கு பின்னாலுள்ள உண்மைகளைப் புரிந்து கொண்டு உங்கள் முன் என்னை எழுந்து நிற்க வைக்கிறது.

இதுபோன்ற வரலாறுகள் புத்தகங்களாக எழுதப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதிக புத்தகங்கள் சிங்கள மக்களும் உலகத்தில் உள்ள ஏனையோர்களும் அறிவதற்கு தெளிவுற புரிந்து கொள்ளும் வகையில் விபரமாக எழுதப்பட வேண்டும்.

நான் உண்மையில் எழுத்தாளர் சாந்தியை அவரது மிகச்சிறந்த பணிக்காக வாழ்த்துகிறேன்.

நிறைவாக :- இத்தால் நான் உறுதியளித்துக் கொள்வது யாதெனில் , நாங்கள் சிங்கள சகோதர சகோதரிகள் அதாவது புத்தரை உண்மையாக பின்பற்றுபவர்கள். உங்களது சுதந்திரத்திற்கான போராட்டத்துடன் உங்களுடன் நாங்களும் நிற்போம்.
உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருதடவை நன்றிகள். இந்த நல்வாய்ப்பினை எனக்குத் தந்தமைக்காக.

(மெலனி திசநாயக்காவின் ஆங்கில உரையின் தமிழாக்கம் துளசிச்செல்வன்

Recommended For You

About the Author: northpole

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.