ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளப் பெற இறுதிக்கட்டப் பேச்சு

1476785670_downloadஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளப் பெற்றுக்கொள்தற்கான இறுதிக்கட்டப் பேச்சுக்கள் வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான உயர் மட்டத் தூதுக் குழுவினர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ள நிலையிலேயே அரசாங்கம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைக்கும் என்றும் அரசாங்கம் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரசல்ஸிற்கு விஜயம்செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் பெல்ஜியத்தின் இளவரசர் லொவ்ரானுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

மீள்புதுப்பிக்கக்கூடிய சக்தி நிலையத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பெல்ஜியத்தின் மன்னர் பிலிப்பின் இளைய சகோ தரரான லொவ்ரா் இளவரசர் இயற்கை வள, நிரந்தரமான முகாமைத்துவம் மற்றும் தூய சக்தி வளத் தொழில்நுட்பத்திற்கான நிலையத்தின் தலைவராகவும் கடமையாற்றுகின்றார்.

இதற்கமைய பெல்ஜியத்தில் நடைமுறையிலுள்ள மீள்புதுபிக்கக்கூடிய தூய சக்தி வலுப்பயன்பாடு தொடர்பிலேயே பிரதமர் ரணி லுக்கும் – பெல்ஜிய இளவரசர் லொவ்ரானுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முக்கியமாக கவனம்செலுத்தப்பட்ட தாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அணுமின் நிலையங்களைக் கொண்டே பெல்ஜியத்தில் தற்போது மின் தேவை பூர்த்திசெய்யப்படுகின்ற போதிலும், எதிர்காலத்தில் மீள்புதுப்பிக்கக்கூடிய மின்சக்தியை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் இளவரசர் பிரதமருக்குத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்ற கட்டடத்தொகுதி 120 வருடங்கள் பழமையானது என்றும், இந்தக் கட்டடத்திற்கான மின்சாரமும் மீள்புதுப்பிக்கக்கூடிய மின் வலுவைக் கொண்டே பயன்படுத்தப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரசல்ஸிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பிரதமர் தலைமையிலான தூதுக் குழுவினர் நேற்றைய தினம் மூடிய அறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.