மாங்குளம் பொலிசால் 9மாதங்களில் 2826150 ரூபா வருமானம்

mankulam-police-division-removed-300x169முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்ப்பட்ட மாங்குளம் பொலிஸ் பிரிவில் கடந்த 9 மாதங்களில் தவறிழைத்த சாரதிகளிடம் அறவிடப்பட்ட தண்டப்பணத்தினுடாக 2826150ரூபா அரசிற்கு வருமானமாக கிடைத்துள்ளதாக மாங்குளம் பொலிஸ்நிலைய வீதிப்போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்……..

கடந்தவருடத்தைவிட இவ்வருடம் வீதிவிபத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில் பொலிசாரின் வீதிப்பாதுகாப்பு நடவடிக்கையினை அதிகரித்து வருவதாகவும் ஆனால் சாரதிகளின் அசமந்த போக்கினாலேயே அதிகவிபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக சாரதிகள் மிகுந்த அக்கறையுடன் செயற்ப்படுமாறும் பயணத்தை ஆரம்பித்தவுடன் அதிகவேகமாக வீடு சென்று சேரவேண்டும் என்ற என்னமும் நித்திரையை பொருட்ப்படுத்தாது பயணத்திலீடுபடுவது உள்ளிட்டமையும் அதிகமாக மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்களில் சிக்குவதாகவும் மோட்டார் சைக்கிளை செலுத்துபவர்கள் வீதிஒழுங்குகளை சரிவர கடைப்பிடிக்காமையுமே பலர் விபத்துக்களில் சிக்க காரணமாக அமைகிறது எனவும் தெரிவித்தார்.

இதனைவிட தமது வாழ்க்கையினை கூட கருத்திலெடுக்காது வீதிவிதிமுறையினை மீறுபவர்களை திருத்தும் முகமாகவே தாம் தண்டப்பணம் அறவிடுவதாகவும் இதனடிப்படையில் கடந்த 9 மாத காலத்தில் தண்டப்பணமாக 2826150 ரூபா அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

A-9வீதியில் 24 கிலோமீட்டர் தூரத்தினையும் மாங்குளம் மல்லாவி வீதியில் 15 கிலோமீட்டர் தூரத்தையும் மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் 15 கிலோமீட்டர் தூரத்தையும் நிா்வகித்து வரும் மாங்குளம் பொலிசார் அதிகவேகத்தில் பயணம் செய்பவர்களை குறைப்பதற்கு பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொள்வதையும் வீதிப்போக்குவரத்து பொலிசார் பலர் கடமையில் ஈடுபட்டுவருகின்றமையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.