
திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவின் கடற்கரை பிரதேசங்களில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்ளை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிலாவெளி வேலூர் பகுதியில் அமைந்த ஹோட்டல்; கோபாலபுறத்தில் உள்ள மற்றுமொரு ஹோட்டல் இ குச்சவெளி ஜாயா நகரில் மீனவர் ஒருவரின் மீன் வாடி மற்றும் புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள சில மீன் வாடிகள் என்பன கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தினால் அகற்றப்பட்டன.
குறித்த கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு கட்டிடங்களை அகற்ற 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் குறித்த கட்டிடங்களை அகற்றாமையின் காரணமாகவே இவ்வாறு சட்டவிரோத கட்டிடங்களை அகற்றப்பட்டன.