ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழில் திரண்டது ஊடக சமூகம்

jaffna-media-protest-2-450x300ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழில் இன்று (புதன்கிழமை) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு கட்டமாக குறித்த போராட்டம் இடம்பெற்றது.

யாழ்.ஊடக அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்னால் நடைபெற்ற இப் போராட்டத்தின்போது, ஊடக சுதந்திரம் வலியுறுத்தப்பட்டதோடு, பொலிஸ் அடக்குமுறைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென்றும், காணாமல் போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் வகையில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதன் செயலாளர் கஜேந்திரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் மற்றும் தென்னிலங்கை ஊடக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.