பின் முள்ளி வாய்க்கால் வீதி விபத்துக்களின் பின்னணி என்ன? விளக்குகிறார் இன அழிப்பு ஆய்வாளர்!


Bilderesultat for மாணவர்களின் படுகொலைசிங்கள அரசு இன அழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது.


இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது.

இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த கால வீதி விபத்துக்கள் அனைத்தையும் நாம் இந்த கண்ணோட்டத்தில் வைத்துதான் புரிந்து கொள்ளவேண்டும்.

தமிழீழத்தில் தொடரும் இன அழிப்பு குறித்து ஆய்வு செய்து வருபவரும் குறிப்பாக பின் யுத்தகால இன அழிப்பின் முக்கியமான கூறாக வீதி விபத்துக்களை அடையாளம் கண்டு தொடர்ந்த எச்சரித்து வருபவரும் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் இன அழிப்பு குறித்த ஆய்வாளருமான பரணி கிருஸ்ணரஜனியை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்ட விடயம் தொடர்பாக தொடர்பு கொண்ட போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ்த்தரப்பு சில உண்மைகளை புரிந்து கொள்வதற்கு சில விலைகளை கொடுக்க வேண்டித்தான் இருக்கிறது.
அப்படியான ஒரு நிகழ்வாகவே இரு பல்கலைக்கழக மாணவர்கள் இன அழிப்பு அரசின் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட விடயத்தை பார்க்க வேண்டியிருக்கிறது.
பின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்களின் பின்னணியில் இன அழிப்பு அரசின் அருப கரங்கள் மறைந்துள்ளதை நாம் கடந்த 7 வருடங்களாக தர்க்க நியாயங்களுடன் அம்பலப்படுத்தி வந்த போதும் யாராலும் அது கவனிக்கப்படவில்லை,

மாறாக அது ஏளனமாகவும் மிகைப்படுத்தப்பட்ட ஒரு கருத்தியலாகவுமே பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இரு மாணவர்களை பலிகொடுத்து தமிழத்தரப்பு அந்த உண்iiயை உணர தலைப்பட்டுள்ளதை கவலையான – கலவையான மனநிலையுடன் நாம் பார்க்கிறோம்.
பின் முள்ளிவாய்க்காலின் பின்னான புற்றுநோய் மரணங்கள் என்பது இன அழிப்பு என்பதை நம்மில் பலர் உணர தமிழினியின் உயிரை நாம் பலிகொடுக்க வேண்டியிருந்தது.
அதன்பின்தான் விச ஊசி விவகாரம் தொடக்கம் இயற்கை மரணங்கள் என்ற பெயரில் நம்மவர் மடியும் அவலத்தை இன அழி;ப்பு கண்ணோட்டத்துடன் நம்மில் பலர் அணுக தலைப்பட்டதும் அதற்கான போராட்டங்கள் நடத்தப்பட்டதும், பாதிக்கப்பட்டவர்களை காக்க ஒரு பொறிமுறை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்த உரையாடல் தொடங்கப்பட்டதும் நடந்தேறியது.

தற்போது இரு மாணவர்களின் உயிரை பலிகொடுத்து பின்முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்களின் பின்னணி குறித்தும் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு குறித்தும் உரையாடல் தொடங்கியிருக்கிறது.
இவற்றை எண்ணி சந்தோசப்படுவதா? துக்கப்படுவதா? என்பது கூட எமக்கு தெரியவில்லை.
ஏனென்றால் எமது தொடர் ஆய்வின் பிரகாரம் இதுவரை 73 இனஅழிப்பு வடிவங்களை பின் யுத்த காலம் என்று அழைக்கப்படும் பின் இன அழிப்பு சூழலில் அடையாளம் கண்டிருக்கிறோம். அவற்றுக்கு இந்த இனம் முகம் கொடுத்துள்ள சூழலில் அவற்றை பாதிக்கப்பட்ட இனம் புரிந்து அதற்கு எதிரான ஒரு பொறிமுறையை வகுக்காவிட்டால் என்ன நடக்கும்?
கற்பனை செய்து பாருங்கள்.. விபத்து, நோய் மற்றும் இன்ன பிற 73 இனஅழிப்பு வடிவங்களின் பெயரால் நாம் அழிந்து கொண்டிருப்போம். அதை விபத்து, இயற்கை மரணம் என்ற பெயரில் நாம் கணக்கெழுதிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
உயிர்களை பலியெடுப்பதுதான் இனஅழிப்பு என்று தட்டையாக புரிந்து வைத்திருபவர்களுடன் எதையும் விவாதிக்க முடியாது.
சிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது.
இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. நடந்த இனஅழிப்புக்கு மட்டுமல்ல, தொடரும் இனஅழிப்பிற்கும் ஐ.நா உட்பட மேற்குலக மற்றும் பிராந்நதிய அரசுகள் துணை என்ற புரிதலை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எனவே அழிவுக்கு முகம் கொடுத்துள்ள நாம்தான் நம்மை பாதுகாக்கும் பொறிமுறையை முதலில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். பிற்பாடு அவை கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு வடிவங்கள் என்பதை அம்பலப்படுத்தி நீதிக்கான ஒரு அனைத்துலக பொறிமுறையை உருவாக்க தலைப்பட வேண்டும்.
நீண்ட கடின முயற்சி இது. ஆனால் வேறு வழியில்லை. நாம் அழிவது தெரியாமலேயே அழிந்து கொண்டு அரசியல் யாப்புக்கள் மற்றும் நல்லிணக்கம் குறித்து பேசுவதெல்லாம் எதிரிகளின் கூட்டு சதிக்குள் நம்மை ஒப்படைப்பதாகவே இருக்க முடியுமே ஒழிய அது நம்மை என்றும் காக்க உதவாது.
மாறாக இன அழிப்புக்கு நாமே வழங்கும் அங்கீகாரமாகவே அது இருக்க முடியும்.
கடந்த 2009 மே மாதத்திலிருந்து உலக இனஅழிப்பு கோட்பாடுகளின் – தத்துவங்களின் வழி நின்று இந்த விபத்துக்கள் குறித்து நாம் எச்சரித்து வந்ததை சதாரண மக்களை விடுவோம் – அரசியல்வாதிகள் குறி;ப்பாக ஊடகங்கள் கூட கவனத்தில் கொள்ளாதது மிகவும் கவலைக்குரிய விடயம்.
இந்த இரு மாணவர்களும் கொல்லப்பட்டவுடன் எந்தவித விசாரணையுமின்றி தமிழ் ஊடகங்கள் ‘விபத்து’ என்றே பதிவு செய்தன. மறு நாள் காலை வரை ஊடகங்கள் வழி அந்த செய்தியே பரப்பப்பட்டது.
நடந்த நேரம், இடம், சூழல், சம்பந்தப்பட்ட மாணவர்களை முன்வைத்து ஒரு சில சந்தேகங்களைக் கூட ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை. ஆனால் நாம் உடனேயே பல ஊடக அரசியல் நண்பர்களை தொடர்பு கொண்டு பல கேள்விகளை எழுப்பினோம். அதையும் பலர் கடந்து செல்லவே விரும்பியதை கவலையுடன் இங்கு பதிவு செய்கிறோம்.
ஆனால் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட காரணங்களினால் இன அழிப்பு அரசால் அந்த படுகொலைகளை நீண்ட நேரம் மறைக்க முடியவில்லை. நமது கேள்வி மிக எளிமையானது. துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்படாவிட்டால் அது விபத்து என்ற முடிவுக்கு நாம் வருவது எவ்வளவு ஆபத்தானது?
எமது மண்ணை இனஅழிப்பு அரசு ஆக்கிரமித்திருக்கிறது. எனவே எமது மண்ணில் நடக்கும் காது குத்திலிருந்து கருமாதிவரை இனஅழிப்பு உள்ளடக்கங்கள் நுட்:பமாக பின்னி பிணைந்துள்ளதை நாம் உணர வேண்டும்.
உதாரணத்திற்கு ஒரு சம்பவம்.
கடந்த 2014 செப்டம்பர் மாதம் ஈழப்போராட்ட களத்தின் முன்னோடிகளில் ஒருவரான மாணிக்கசோதி அபிமன்னசிங்கம் ஒரு வீதி விபத்தில் கொல்லப்பட்டார். அவரது சாவை ஒரு விபத்தாகவே நமது ஊடகங்கள் பதிவு செய்தன.
அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரு மாற்று அரசியல்வாதியாக இணக்க அரசியலுக்குள் தன்னை புதைத்திருக்கும் கூட்டமைப்புக்கு எதிராக சுயேட்சையாக கடந்த வடமாகாணசபை தேர்தலில் களமிறங்கிய அவரது விபத்தை மீளாய்வு செய்யவோ, விசாரைணக்குட்படுத்தவோ நமது ஊடகங்கள் தயாராக இல்லை.
ஆனால் அந்த விபத்து தொடர்பாக இன்றளவும் சில உண்மைகள் வெளிக்கொணரப்படவில்லை.
நாம் எமது ஆவணங்களில் பல வீதி விபத்து மரணங்களின் பின்னான இன அழிப்பு மரணங்களில் ஒன்றாகவே அதை ஆவணப்படுத்தியிருக்கிறோம்.
ஏனென்றால் மாணிக்க சோதி அபிமன்னசிங்கத்தின் சகோதரியும் யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியுமான சாந்தா அபிமன்னமன்னசிங்கம் இந்த விபத்து தொடர்பாக நீதிமன்றில் பல குறுக்கு விசாரணைகளை நடத்தியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே இனஅழிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கும் ஒரு இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகங்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
பின் போர்க்கால சூழலில் தொடரும் இனஅழிப்பு வெளிப்பார்வைக்கு சில மாயத் தோற்றங்களால் அபிவிருத்தி, நல்லிணக்கம், மக்கள் நலன் போன்று காட்சியளிக்கும். நாமும் அதற்கு மயங்கிவிடுவோம்.
அதை நாம் வேறு பிரித்து அறிவதும் கடினம். ஏனென்றால் நமது தோல்வியும் விளைவான அவலமும் துயரமும் அத்தகைய உளவியலாக பின்னப்பட்டிருக்கும். அதையும் மீறி சிந்திக்க நாம் தலைப்படுவது அவசியம்.
உதாரணத்திற்கு ஒரு சம்பவம்.
2009 இற்கு பிற்பாடு வவுளியாவுடன் நின்றிருந்த ‘யாழ்தேவி’யை வட தமிழிழத்திற்குள்ளும் கொண்டு வந்தார்கள். ஆனால் கூடவே அது ‘மரண தேவி’யாகவும் இருந்தது. நீங்களே கணக்கு பாருங்கள். பலரின் உயிரை அது காவு வாங்கிவிட்டது. இதை விபத்து என்று வரையறுப்பது நமது மடமைகளில் ஒன்று. இந்த விபத்துக்கள் கட்டுப்படுத்த முடியாத ஒன்று அல்ல.
ஆனால் இனஅழி;ப்பு நோக்கில் ஒரு மண்ணை ஆக்கிரமித்துள்ள ஒரு அரசு எப்படி இதை கட்டுப்படுத்தும் என்ற உண்மையையும் நாம் சேர்த்துப் புரிந்து கொண்டால் இந்த விபத்துக்களின் பின்னணியை அறிந்து கொள்ள முடியும்.
அத்தோடு கூடவே போதைப்பொருள் பாவனையும் தென்னிலங்கை பாலியல் தொழிலாளிகளும் – திருடர்களும் வடக்கிற்குள் வந்துபோக ஒரு இலகு வழியாக ‘யாழ்தேவி’ இருந்தது. கலாச்சார -பண்பாட்டு இன அழிப்பின் வேகத்தை ‘யாழ்தேவி’ அதிகரித்து வைத்ததுதான் நடந்த உண்மை.
இது விரிவாக பேசப்பட வேண்டிய விடயம். ஒரு சில வரிகளில் இதை புரிய வைப்பது கடினம்.
மாணவர்களின் மரணத்தை அடுத்து வலைத்தளங்களி;ல் பலர் அதிர்ந்து போய் விபத்துக்களால் கூட நாம் அழிந்து கொண்டிருக்கிறோம் என்று புலம்புகிறார்கள். நல்ல விடயம்.
ஆனால் இனஅழிப்பு அரசின் சதியை புரியாமல் வேகக் கட்டுப்பாடு, சாரதி அனுமதிப்பத்திரம் எடுக்காமை, குடி போதை குறித்தெல்லாம் வகுப்பெடுத்து இந்த விபத்துக்களின் பின்னணியை தங்களையறியாமலேயே திரிக்கிறார்கள்.
இவையெல்லாம் உதிரிக்காரணங்கள். இதன் மையமாக இனஅழிப்பு அரசே இருக்கின்றதென்தை நாம் புரியாதவரை இவை தொடர்கதைதான்.
இனி இந்த வீதி விபத்துக்களின் பின்னணி குறித்து பார்ப்போம். 2009 இற்கு முன்பு புலிகளின் ஆட்சிக்காலத்தில் மிகவும் போர்ச்சூழல் நிலவிய காலங்களில்கூட போக்குவரத்து ஒழுங்குகளை நடைமுறைப்படுத்த முடியாத இக்கட்டான நேரத்திலும் வீதி விபத்துக்கள் என்பது மிகக் குறைவாகவாக இருந்தன.

ஆனால் தற்போது தமிழர் தாயகத்தில் தினமும் பத்திற்கும் குறைவான விபத்துக்கள் நடக்கின்றன. குறைந்தது ஒருவராவது தினமும் இதன் மூலம் கொல்லப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
இதன் பின்புலதத்தில் இனஅழிப்பு அரசின் அருபகரங்கள் மறைந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
இதற்கான நோக்கங்கள் பின்வருமாறு
01. வீதிவிபத்துக்களை திட்டமிட்டு உருவாக்குவதனூடாக மாற்றுக்கருத்தாளர்களை கொல்லுதல் அல்லது காயப்படுதத்ல் நடக்கிறது.
02. வீதி விபத்துக்களை காரணம் காட்டி புதிய வீதி அமைப்பதாககூறி தமிழர் நிலம் துண்டாடப்படுகிறது.
03. திட்டமிட்ட வீதி விபத்துக்களினூடாக தமிழர் வாழ்விடம் தமிழர் வழிபாட்டு தலங்கள் பண்பாட்டு மையங்கள் சேதமாக்கப்பபட்டு அவை முற்றாகவோ அல்லது பகுதிபகுதியாகவோ அகற்றபடுகின்றன.
குறிப்பாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு பகுதியாகவே இந்த வீதி விபத்துக்கள் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. கீழே நாம் உதாரணத்திற்கு ஒரு நிகழ்வை விளக்கியுள்ளோம்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு வட தமிழீழத்ததையும் தென் தமிழீழத்தையும் இணைக்கும் தமிழர் தொன்ம நிலப்ரப்பை அண்டிய பகுதியில் ஒரு ஆலமரமும் அதன் கீழ் அமைந்திருந்த தமிழிர்களின் தொன்மத்தையும் மரபையும் தொடாந்து பேணும் சிறுதெய்வ வழிபாட்டு முறைமைக்குரிய வைரவர் சிலையும் ஒரு திட்டமிட்ட வீதி விபத்தின் மூலம் விழுத்தப்பட்டது.
பிற்பாடு பல தமிழ்ப் பகுதிகளில் இத்தகைய யுகதிகள் கையாளப்பட்டு சிங்களமயமாக்கம் தொடர்ந்து வருகிறது.
அது ஒரு இனஅழிப்பு நடவடிவடிக்கை என்பதை அங்குள்ள அரசியல்வாதிகள் தொடக்கம் ஊடகங்கள் வரை யாருமே பார்க்கவில்லை. வெறுமனே ஒரு வீதி விபத்தாகவே பதிவு செய்து விட்டு அதை எல்லோரும் மறந்து விட்டார்கள்.
ஆனால் அது ஒரு திட்டமிட்ட இனஅழிப்பு என்பதை நாம் தற்போது மட்டுமல்ல அப்பொதே அடையாளம் கண்டோம்.
ஆலமரம் விழுந்தால் அங்கு ஒரு ஆலமரம்தான் வைக்கப்பட வேண்டும். அல்லது அங்கு இனி மரங்களை நடாது விட வேண்டும். ஆனால் இனஅழிப்பு அரச நிர்வாகம் அங்கு ஒரு அரச மரத்தை நட்டார்கள்.
ஆலமரம் என்பது தமிழர்களின் தொன்மத்தையும் மரபையும் பேணும் ஒரு அடையாளமாக இருக்கும் அதே சமயத்தில் அரச மரம் என்பது சிங்களவர்களின் மரபையும் தொன்மத்தையும் பேணும் ஒரு அலகாக இருக்கிறது
எனவே தமிழர் நிலத்தில் தமிழுக்கு பதிலீடாக சிங்களத்தை நிறுவும் முயற்சியாக தமிழிர் நிலத்தை ஆக்கிரமிக்கும் ஒரு வடிவமாக ஆலமரத்தை வீழ்த்தி விட்டு அரச மரத்தை நட்டது இனஅழிப்பு அரசு.
பின்பு அதே அரச மரத்தின் கீழ் தமிழர்களின் தொன்மத்தையும் மரபையும் பேணும் சிறு தெய்வ வழிபாட்டு முறையான வைரவர் சிலை இருந்த இடத்தில் புத்தர் சிலையை வைத்தது இனஅழிப்பு அரசு.
காலப்போக்கில் அந்த இடம் சிங்கள யாத்ரீகர்கள் வந்து தரித்து நிற்கும் இடமாகவும் வழிபாட்டு தலமாகவும் படிப்படியாக மாற்றம் கண்டது.
விளைவாக அங்கு இனஅழிப்பு அரசின் இராணுவம் நடத்தும் உணவு விடுதியும் பிற்பாடு அங்கு பணிபுரிய என்று சிங்களவர்களும் வந்து சேர்ந்தார்கள்.
ஏற்கனவே அந்த இடத்தை பராமரிக்க என்று வந்த புத்த பிக்கு சிலரும் இந்த பணியாளர்களும் சேர்ந்து அங்கு நிரந்தர வசிப்பிடத்தை நிறுவிக் கொண்டார்கள்.தற்போது அது படிப்படியாக ஒரு சிங்கள மினி கிராமமாக மாறிக்கொண்டிருக்கிறது.
ஒரு வீதி விபத்தின் பின் நடந்த மாற்றங்கள் இவை. எனவே நடந்தது ஒரு வீதி விபத்தல்ல.. அது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு.
தமிழர் தாயகம் எங்கும் தமிழர்களின் கலை பண்பாடு கலாச்சார அடையாளங்கள் சிதைக்கப்பட்டு பவுத்த மேலாதிக்கமும் பவுத்த மதமும் தீவிரமாக விதைக்கப்பட்டு வரும் சூழலை நாம் அறிவோம். இன அழிப்பிற்கு பிறகான இனச்சுத்திகரிப்பு இது.
வீதி விபத்துக்கள் என்ற போர்வையில் நடந்த இனஅழிப்பிற்கு இந்த சம்பவம் மிக எளிமையான உதாரணம் ஆகும்.
அரச மரம் நடப்பட்டதை விட தமிழர்களின் சிறுதெய்வ வழிபாட்டை சிதைத்ததுதான் இங்கு முக்கியமானது.இந்த சிறு தெய்வ வழிபாட்டை தடை செய்ய முற்படுவது இனச்சுத்திகரிப்பின் நுண்வடிவங்களில் ஒன்று.
அதாவது இந்த சிறு தெய்வ வழிபாட்டு முறை தமிழர்களின் தொன்மம் மரபுகளை தொடர்ந்து பேணுவதும் அதை மீட்டெடுக்கும் அலகாகவும் தமிழ் அடையாளங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. எனவே அதை சிதைக்க வேண்டிய கட்டாயம் இனப்படுகொலை அரசுக்கு இருக்கிறது.
பெரிய கோயில்கள் ஏற்கனவே சிங்களத்தை நக்கிப்பிழைக்கும் டக்ளஸ் கருணா போன்றவர்களை கொண்டு கையகப்படுத்தப்பட்டிருப்பது மட்டுமல்ல அவை எல்லா மதத்தினரும் கலந்து கொள்ளும் ஒரு கேளிக்கை பிரதேசங்களாகவும் மாறி தமிழ் தனித்துவம் அழிக்கப்பட்டிருக்கிறது.
எனவே தமிழ் தொன்மத்தை தொடர்ந்து பேணும் அதை மீட்டெடுக்கும் இந்த சிறுதெய்வ வழிபாட்டு முறை சிங்களத்தால் குறிவைக்கப்ட்டிருக்கிறது. இனச்சுத்திகரிப்பின் நுண்வடிவம் இது.
ஒரு வீதி விபத்தின் பின்னணியில் தமிழர் நிலம் ஆக்கிரமிக்ப்பட்டு தமிழர்களின் தொன்ம மரபுக்குரிய வழிபாட்டு முறைமை சிதைக்கப்பட்டு தமிழர் தமிழர் பண்பாடு சிதைக்கப்பட்டு அந்த நிலத்தை சார்ந்திருந்த தமிழர்களின் சிறு தொழில் முயற்சிகள் முடக்கப்பட்டு தமிழர் வாழ்வும் பொருளாதாரமும் சூறையாடப்பட்டுள்ளது.
எனவே மாணவர்களின் மரணங்களையடுத்து வீதி விபத்துக்களின் பின்னணி தொடர்பாக ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வை இன்னும் விரிவான , ஆழமான உரையாடலாக மாற்றவேண்டும் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிற்கு எதிராக மக்களை அணி திரட்ட வேண்டும். இதுவே இன்றுள்ள அவசியமான, அவசரமான பணியாக இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.