மன்னாரில் கடற்படையினரை எதிர்த்த மீனவர்களில் மூன்று பேர் காணாமல் போனதால் பதற்றம்

827710614police_4அரிப்பு பகுதியில் இலங்கை கடற்படையினருடன் உள்ளுர் மக்கள் முரண்பட்டுள்ள நிலையில் தலைமன்னார் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமற்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர்களது உறவினர்களால், காணாமல் போனமை தொடர்பில் இலங்கை காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 21ம் திகதி வெள்ளிக்கிழமை தொழிலுக்கென கடலுக்குச்சென்றிருந்த நண்பர்களான மூவரே காணாமல் போயுள்ளனர். சுமார்22 முதல் 25 வயதுக்கிடைப்பட்ட இளம் மீனவர்களே காணமற்போயுள்ளனர்.

கிராமத்தினுள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினரை பொதுமக்கள் திரண்டு தாக்கியதை தொடர்ந்து உள்ளுர் மீனவர்கள் பழிவாங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.