யாழ், தென்மராட்சி அல்லிப்பளையைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தை கிளாளி வெடிவிபத்தில் மரணம்!!

14731254_958140870984586_8655915356313021044_nகிளிநொச்சி பளை பிரதேச செயலக பிாிவில் கிளாலி பிரதேசத்தில் இன்று ஞாயிற்று கிழமை மதியம் இடம்பெற்ற வெடி விபத்தில் ஒருவா் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், மற்றொருவா் படுகாயங்களுக்குள்ளாகி
யாழ் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்

குறித்த சம்பவத்தில் அறத்திநகர் அல்லிப்பளையைச் சோ்ந்த 34 வயதுடைய எட்டுப் பிள்ளைகளின் தந்தையான கறுப்பையா ராசா என்வா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா். மேலும் கச்சாா்வெளி பளையைச் சோ்ந்த 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பாலசுப்பிரமணியம் பகீரதன் என்பவா் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதான வைத்தியசாலையில் கிசிசை பெற்று வருகின்றாா்.

இந்தச் சம்பவம் 23-10-2016 ஞாயிறு மதியம் 12.30 மணியளவில் கிளாலி பிரதேசத்தில் வெடிபொருள் அகற்றப்படாத பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தினை தொடா்ந்து இறந்தவரின் உறவினா்கள் பளை பொலீஸ் நிலையத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு முறைப்பாடு செய்து போது பொலீஸாா் மாலை 6.15 மணிக்கே சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனா். மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனா்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.