முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்களை இழந்திருக்கின்றோம் – அமைச்சர் விஜயகலா

screen-shot-2016-10-24-at-09-30-06கடந்த காலத்தில் வடக்கு மக்கள் போரால் பாதிக்கப்பட்டு சிறுவர்கள் முதல் முதியோர்வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரை முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின்போது இழந்திருக்கின்றோம் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள சிறுவர் இல்லங்களைப் பார்வையிடுவதற்காக இன்று மாலை விஜயம் செய்திருந்த அவர், செட்டிபாளையம் சிவன் கிட்ஸ் ஹேமில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கிழக்கு மாகாண மக்களும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலைப் பிரதேசம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹில்புல்லா இருக்கின்றார்.

இன்று மட்டக்களப்புக்கு வந்ததன் பின்னர்தான் தெரிகின்றது இப்பகுதியில் மீள்குடியேற்ற அமைச்சின் செயற்பாடுகள் மிகவும் குறைவாகத்தான் இடம்பெற்றிருக்கின்றன என்பது.

இந்நிலையில்தான் நாம் நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம். இதனூடாக நாம் எதிர் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வேலைத் திட்டங்கைள மேற்கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

இப்பிரதேசத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு எமது அமைச்சிக்கும் இருக்கின்றது. இயலுமான வரை எமது அமைச்சினுடாக பல வேலைத் திட்டங்ளை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம்.

மேலதிகமாக மீள் குடியேற்ற அமைச்சினூடாகவும் தொடர்பு கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள நாம் திட்டமிட்டுள்ளோம். வடக்கு கிழக்கிற்குத்தான் நாம் இவ்வாறான வேலைத் திட்டங்களை அதிகளவு மேற்கொண்டு வருகின்றோம்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்தி செய்து கொடுக்க வேண்டியுள்ளது. அவற்றை நிவர்தி செய்து கொடுக்க வேண்டிய பொறும்பும் எமக்கு உள்ளது.

ஆனால் கடந்த அரசாங்கத்தினாலும் தற்போதைய அரசாங்கத்தினாலும் இவ்வாறு இல்லங்களுக்கு நிதிகளை இன்னும் வழங்கவில்லை.

சிறுவர் உரிமைக்கள் மற்று சிறுவர் பாதுகாப்புக்கள் என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும். பெற்றோர் வீட்டிலிருந்தும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இல்லங்களில் பிள்ளைகளைக் கொண்டு விட்டிருக்கின்றார்கள்.

இவற்றுக்கு மேலாக யுத்ததினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள்தான் அனேகமானோர் சிறுவர் இல்லங்களில் இருக்கின்றார்கள்.

18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் விதவைகளாக உள்ளனர், பலர் 3 குழந்தைகளுடன் விதவைப் பெண்களாக உள்ளார்கள். எனவே தமிழ் மக்கள் மிகவும் மோனமான முறையில் யுத்ததினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறானவர்களுக்கு வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எதிர்கால வாழ்வு வளம்பெற அரசாங்கம் சகல வசதிகளையும், இவ்வாறானவர்களுக்கு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்.

வடமாகாணத்தில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் 5000 குடும்பங்களுக்கு தலா 100,000 ரூபாய் வீதம் எமது அமைச்சின் மூலம் வழங்கி இருக்கின்றோம். இவ்வாறான உதவிகளை இங்குள்ளவர்களும் பெறவேண்டும்.

மலையகப் பகுதியில் அதிகமான சிறுவர்கள் வேலைகளுக்கு அமர்த்தப் படுகின்றார்கள். வட பகுதியில் ஆலயங்களுக்கு முன்னாலிருந்து சிறு, சிறு வியாபாரங்களில் சிறுவர்கள், ஈடுபடுகின்றார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அவர்களை இனங்கண்டு பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டும். அது எமது பாரிய பொறுப்பாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூரத்தி, மண்முனை தென் எருவிப் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி. மூ.கோபாலரெத்தினம், மற்றும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்த்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.