யாழில் ஆவா உட்பட 5 க்கும் மேற்பட்ட பாதாள உலகக் குழு; அதிரடி நடவடிக்கைக்கு தயாராகிறது அதிரடிப்படை

jaffna-boys-06யாழ். குடா எங்கும் ஆவா குரூப் எனும் பாதாள உலகக் குழுவுக்கு மேலதிகமாக மேலும் 5 பாதாள உலகக் குழுக்கள் செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் கண்டறிந்துள்ளனர்.

குறித்த குழுக்கள் தொடர்பிலான அனைத்து விடயங்களையும் சேகரித்துள்ள தேசிய உளவுப் பிரிவு அது தொடர்பில் பாதுகாப்பு தரப்பை தெளிவுபடுத்தியுள்ள நிலையில் மூன்று சிறப்பு பொலிஸ் குழுக்களை அமைத்து இந்த குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆவா குரூப்புக்கு மேலதிகமாக குடா நாட்டில் நிமலன், டில்லு, ஜூட், பஹீல் மற்றும் சன்னா ஆகிய பெயர்களில் இந்த பாதாள உலகக் குழுக்கள் செயற்பட்டு வருவதாக வட பிராந்தியத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

இந் நிலையில் இந்த அனைத்து சட்டவிரோத பாதாள உலகச் செயற்பாடுகளையும் முறியடிக்க பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர வட பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத் குமாரவுக்கு ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், அது குறித்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி அடுத்து வரும் நாட்களில் குடா நாடெங்கும் தேடுதல் வேட்டைகளை ஆரம்பிக்க பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தயாராகியுள்ளனர். பாதாள உலகக் கோஷ்டியினரை இலக்கு வைத்து இந்த தேடுதல்கள் நடத்தப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் ஊடாக அறிய முடிகின்றது.

இந் நிலையில் வடக்கில் தற்போது நிலவும் சட்ட விரோத செயற்பாடுகள் பலவற்றை முறியடிக்கும் விதமாக சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காகவேண்டி, வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சேவையாற்றும் அனைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், பொலிஸ் அத்தியட்சர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சர்கள், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் விடுமுறை மற்றும் ஓய்வுநாள் ஆகியன மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே வடக்கு பாதாள உலகக் குழுக்கள் தொடர்பில் விசாரணைகள் செய்துவரும் சிறப்பு விசாரணைக் குழுக்கள் 2009 ஆம் ஆண்டு யுத்ததின் பின்னரேயே அக்குழுக்கள் தோற்றம் பெற்றுள்ளதை கண்டறிந்துள்ளது. குற்ப்பாக யுத்ததின் பின்னர் வட பகுதியில் பல நிதி நிருவனங்கள் ஊடாக தவணை கொடுப்பனவு முரையில் வாகங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தவணைக் கட்டனம் செலுத்தப்படாத சந்தர்ப்பங்களில் இத்தகைய குழுக்களின் உதவியை நாடி வாகனங்களை மீட்ட சந்தர்ப்பங்கள் பலவும் பதிவாகியுள்ளதாகவும் குறித்த விசாரணையில் தெரியவந்துள்ளதாக அறிய முடிகின்றது.

பல பாதாள உலகக்குழுக்கள் செயற்பட்ட போதும் ஆவா குரூப் எனும் பாதாள குழுவே வடக்கில் முன்னிலையில் திகழ்வதாகவும் அதன் தலைவனாக கருதப்படும் விநோதன் என்பவர் தற்போதும் விளக்கமறியலில் இருந்து வரும் நிலையில் அதன் முக்கிய செயற்பாட்டாளர்களாக ஜெயனத்தன், ஜக்குணராசா, அங்கலிங்கம் பிரசங்சா, ஜெயம், காந்தன், சிவலிங்கம், ராசய்யா போன்ற பெயர்களில் உலாவும் நபர்கள் கருதப்படுகின்றனர். இவர்களின் நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தியுள்ள பொலிசார் அவர்களை மிக விரைவில் கைது செய்வர் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.