எமது கலை, கலாச்சாரங்களை மாணவர்களே கட்டிக்காக்க வேண்டும்!

img_3969தமிழர்களுடைய கலை, கலாசார விழுமியங்களை எம்முடைய இளம் சமுதாயமாகிய மாணவர்களே கட்டிக் கடிகாக்க வேண்டும். எம்முடைய கலை, கலாசாரங்களிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தற்பொழுது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாணவ பாராளுன்ற நிகழ்வில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே சிறுவர், மகளீர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.

கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாணவர்கள் நாடாளுமன்ற மூன்றாம் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் கல்லூரி பஞ்சலிங்கம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான துறை தலைவர் கே.ரி.கனேசலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மாணவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதம விருந்தினர் விஜயகலா மகேஸ்வரனால் சின்னம் சூட்டப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மாணவ பாராளுமன்றத்தில் எதிர்கட்சி இல்லாமையால் அமளிதுளி இல்லாமல் அமைதியாகவுள்ளது. மேலும், மாணவ பாராளுமன்றத்தில் பாரிய பிரச்சினையாக நிதி பற்றாக்குறை காணப்படுகின்றது. எனவே, அதிபர், கல்லூரி பொதுக் குழு நிர்வாகம் ஆகியன இவ்விடயம் தொடர்பில் உரிய கரிசனை எடுக்க வேண்டும். நிதிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பாடசாலை வளாகத்தினை விட்டு வெளியில் சென்று நிதியினை சேகரிக்க கூடாது. அவ்வாறு சேகரிக்கின்ற பொழுது மாணவர்களின் எதிர்கால கல்விக்கு பாதிப்புக்கள் ஏற்படலாம். அதாவது, இச்சிறு வயதில் வீதிகளில் இறங்கி நிதி சேகரித்து சமூக சேவைகளில் ஈடுபடும் பொழுது அதில் மூழ்கி கல்வியை இழக்கக் கூடும். மாணவ பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளை பார்க்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாவற்றையும் பேசுவார்கள். எனவே, மாணவராகிய நீங்களே எதை பேச வேண்டும் எதை பேசக் கூடாது என்பதை தீர்மானிக்க வேண்டும். மாணவ பாராளுமன்றத்தில் பாடசாலைக்குள் கடை அமைப்பது தொடர்பாக பேசப்பட்டது. அதற்காக நான் 50,000 எனது செலவில் இருந்து ஒதுக்கி தருகிறேன் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் கல்லூரி நிர்வாகம் குழு உறுப்பினர்கள், அயல்பாடசாலை அதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.