சவூதியில் தடுப்பூசி ஏற்றப்பட்டு கொலைசெய்யப்படும் மலையக பெண்கள்

74332சவுதி அரேபியாவிலுள்ள ஒலேய்யா முகாமில் இலங்கை பணிப் பெண்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள இலங்கை பணிப் பெண்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயம் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் களனி தொகுதி பிரதான அமைப்பாளர் ஏ.எஸ்.எம். இஸ்மித் பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்கவிடம் முறையிட்டதை அடுத்து அவர் அங்குள்ள இலங்கை பணிப் பெண் ஒருவருடன் கலந்துரையாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இதேவேளை, ஹட்டன் பகுதியைச் சேர்ந்த கல்பனா ஹெக்டர் என்ற பெண் தடுப்பூசி ஒன்று ஏற்றப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யார் இந்த கல்பனா ஹெக்டர் என்பது குறித்து ட்ரூ சிலோன், ஏ.எஸ்.எம். இஸ்மித்துடன் தொடர்புக் கொண்டு வினவியது.

இதன்படி, கல்பனா ஹெக்டர் தொடர்பில் தமக்கும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவித்த அவர், கல்பனாவின் புகைப்படமொன்றை எமக்கு வழங்கியிருந்தார்.

இந்த பெண் ஹட்டன் பகுதியைச் சேர்ந்தவர் என்பது மாத்திரமே தெரியவந்துள்ளதுடன், வேறு தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகியில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பெண்ணின் சடலம் ஒலேய்யா முகாமிலுள்ள குளிரூட்டப்பட்ட அறையொன்றில் வைக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள பெண்கள் பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்கவிடம் தொலைபேசியூடாக தெரிவித்திருந்தனர்.

இந்த பெண் தொடர்பான தகவல்களை அறிந்திருக்கும் பட்சத்தில் எமது செய்திப் பிரிவிற்கு அறிவிக்குமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த பெண் தொடர்பான தகவல்களை அறிந்திருக்கும் பட்சத்தில் எமது செய்திப் பிரிவிற்கு அறிவிக்குமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.