பாவா ஆதம் மலை பெயர் நீக்கம்

adams-peak-sri-lanka-paintபாவா ஆதம் மலை என ஆங்கிலத்தில் (Adam’s Peak) பெயரிடப்பட்ட பெயர் கற் பலகை மீது காணப்பட்ட எழுத்துகள் ஒரு சில தீய எண்ணம் கொண்டவர்களால் மை தடவி மறைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிங்களத்தில் ‘ஶ்ரீ பாத’ தமிழில் சிவனொளி பாதமலை, ஆங்கிலத்தில் ‘Adam’s Peak’ (ஆதாமின் மலை) எனக் குறிப்பிடப்பட்டிருந்த குறித்த பெயர்ப் பலகையின் பெயரே இவ்வாறு மை தடவப்பட்டு நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மலையை, பௌத்தரகள், ஹிந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள தரிசித்து வந்த நிலையில், குறித்த பகுதியை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதாக தெரிவித்து தீய எண்ணங்களைக் கொண்டவ ஒரு சிலர், அப்பகுதியில் பிரச்சினை ஏற்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த நாசகார வேலையைச் செய்ததாக கருதப்படும் இருவர், குறித்த பெயர்ப்பலகைக்கு முன்னாலிருந்தவாறு புகைப்படம் எடுப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.