கொழும்பில் காணாமல்போன காரைதீவு குடும்பஸ்தரின் சடலம் நேற்று பாழடைந்த கிணற்றில் மீட்பு!

vivekananthan-1கொழும்பில் கடந்த 3தினங்களாகக் காணாமல்போயிருந்த காரைதீவு இளம் குடுபஸ்தரின் சடலம் நேற்று நான்காவதுதினம் திங்கட்கிழமை பகல் மொறட்டுவியிலுள்ள பாழடைந்த கிணற்றில் மீட்கப்பட்டுள்ளது.

இவரது சடலத்தை மீட்ட மொறட்டுவ பொலிசார் மேலதிக பரிசோதனை மற்றும் விசாரணைக்காக மொறட்டுவ வைத்தியசாலையில் வைத்துள்ளனர்.

அவர் வேலைசெய்த பல்கலைக்கழகத்திற்கு முன்னாலுள்ள ஆற்றோரமருகே இருந்த பாழடைந்த கிணற்றில் அவரதுசடலம் கிடந்தது என பொலிசார் தெரிவித்துள்ளபொலிசார் மனைவி குடும்பத்தினரை கொழும்புக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

கொழும்புக்கு தொழில்நிமித்தம் சென்ற காரைதீவைச்சேர்ந்த இளம் குடும்பஸ்தரொருவர் கடந்த நான்குதினங்களாகக் காணாமல்போயிருந்தார்.

காரைதீவைச்சேர்ந்த வேலுப்பிள்ளை விவேகானந்தன் -வயது48- என்பவரே இவ்விதம் காணாமல்போயிருந்தவர். ஒருபிள்ளையின் தந்தையான இவர் ஆசிரியை திருமதி விவேகாநந்தத்தின் கணவராவார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது.

இவர் கடந்த ஒரு வருடகாலமாக ஜசிசி கம்பனியில் தச்சுத்தொழிலாளியாக வேலைசெய்துவந்துள்ளார். மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் வேலை நடப்பதால் அங்கு ஒரு அறையில் தங்கியிருந்து ஏனைய சக தொழிலாளர்களுடன் வேலைபார்த்துவந்திருக்கிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை அவரிடமிருந்து மனைவிக்கு அவரது தொலைபேசியிலே இங்கொரு பிரச்சினை நடக்கிறது. எனது அறையைச்சுற்றி சிலர் நிற்கிறார்கள் என்று அவர்கூறியிருக்கிறார். சிலமணிநேரத்தில் எல்லாம் சுமுகமாக முடிவடைந்துவிட்டது என்று சொல்லியிருக்கிறார்.

பின்னர் அன்று பிற்பகல் அளவில் அதேதொலைபேசியில் சிங்களமொழியில் உங்கள் கணவரைக்காணவில்லை என்று ஒரு தகவல் கிடைத்ததாம்.
அன்றிரவு மனைவி மற்றும் உறவினர்கள் கொழும்புசென்று அவர் வாழ்ந்த அறையைபார்த்தபோது சீல் இட்டிருந்தது.அது பொலிசார் இட்டசீல் என்பது பின்னர் தெரியவந்தது.

உடனே மொரட்டுவ பொலிசாரிடம் சென்று விடயத்தைக்கூறவே அவர்களும் வந்து சீலை உடைத்து அறையைப்பார்த்தபோது உள்ளே பெட்சீற்றில் இரத்தக்கறையும் குசினிப்பகுதியிலும் இரத்தக்கறை காணப்பட்டதாம்.மேலும் இரத்தக்கறை படிந்த சுத்தியல் ஒன்றும்காணப்பட்டதாம்.

அப்குதி நீதிவான் வந்து பார்வையிட்டுச்சென்றார்.
பின்பு மோப்பநாயுதவியுடன் பொலிசார் தேடுதல் நடாத்தியபோதும் மழை காரணமாக எவ்வித தடயமோ தகவலோ கிடைக்கவில்லை.

ஆகவே மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரை வீட்டுக்குச்செல்லுமாறும் ஏதாவது தகவல் கிடைத்தால் சொல்லுவோம் என்று பொலிசார் கூறியுள்ளனர்.
அதன்படி அவர்கள் திரும்பியுள்ளனர் நேற்றுடன் 04 நாட்களாகியும் எவ்விததகவலுமில்லாமல் குடுபத்தினர் பதைபதைத்திருந்தனர்.

அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் மனைவி பிள்ளை பெற்றோர்கள் பரிதவித்திருந்தனர்.நேற்று கல்முனைப்பொலிசார் வீட்டுக்குவந்து விசாரணைசெய்துசென்றுள்ளனர் என அவரது மனைவி சொன்னார்.

இந்நலையில் நேற்று பகல் மொறட்டுவப்பொலிவாரிடமிருந்து சடலம் கிடைத்த செய்தி கிடைக்கப்பபெற்றதாக அவர் அழுதழுது சொன்னார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.