30km நீளம் 3km அகலம் கொண்ட ராமர் பாலம்

img_1355-300x169இராமர் பாலம் உண்மைதானா? நம்மைப்பெருமை கொள்ள வைக்கும் நாசாவின் ஆய்வறிக்கை… இராமயணத்தில் இராம சேது என குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று பொக்கிஷம். இதை இன்னும் பலர் உண்மையா, பொய்யா என விவாதித்துக் கொண்டிருக்கையில், ஆம்! இராம சேது உண்மை தான், இது ஒரு வியக்கத்தக்க கட்டுமானம் என புகழாரம் சூட்டியிருக்கிறார்கள் நாசாவின் விஞ்ஞானிகள்.

இன்றைய உயர் தரமான தொழில்நுட்பங்களை வைத்து கூட இப்படி ஒரு கட்டுமானத்தை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடிக்க முடியாது.

இராமாயணம் அறிந்திருப்போம், இராம புராணம் மற்றும் இராம சேது எப்படி கட்டப்பட்டது என பல விடயங்களை அறிந்து வைத்திருப்போம். ஆனால், அந்த கட்டுமானத்தின் பின் உள்ள பல வியக்கத்தக்க விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? எண்ணற்ற அதிசயங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது இராம சேது. அதைப் பற்றி தெரிந்துக் கொள்ள தான் இந்த கட்டுரை, தொடர்ந்து படியுங்கள்…

நாசா கூறும் விளக்கம் நாசா விண்வெளி மூலம் தனது செயற்கைக் கோளை பயன்படுத்தி எடுத்த புகைப்படத்தைக் கொண்டு செய்த ஆராய்ச்சியின் மூலமாக கூறுவது, இராம பாலம் வெறும் மணல் திட்டுகள் அல்ல.

மற்றும் இது வெறுமனே கற்களை தூக்கி வீசி கட்டியவாறு இல்லை.

மிக சரியாக திட்டமிட்டு கட்டிமுடிக்கப்பட்ட கட்டுமானம் தான் இராம சேது. என கூறியிருக்கிறார்கள் இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதை போலவே மிக சரியான இடத்தில் இராமர் பாலம் இடம் பெற்றுள்ளது.

அதனால் இராமாயணம் சொல்வது உண்மை இராம சேது கட்டமைக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன என கூறப்படுகிறது.

கடந்த 1480 கி.மு.வில் கடலில் ஏற்பட்ட ஒரு சூறாவளியினால் இராம சேது பாலம் அழிந்துவிட்டதாக அறிவியல் கூற்றுகள் கூறுகின்றன.

எனவே, 1480 கி.மு.விற்கு முன்பு வரை இராம சேது பயன்பாட்டில் தான் இருந்திருகிறது. அதை மக்கள் நடப்பதற்கு உபயோகப்படுத்தியுள்ளனர்.

இராம சேதுவில் ஆராய்ச்சி மேற்கொண்ட பல புவியியலாளர்கள், இராம சேது இயற்கையாக உருவானதல்ல இது மனிதர்களால் கட்டமைக்கப்பட்டது தான் என கூறுகின்றனர்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.