பெரும்பான்மையினருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் சிறுபான்மையினருக்கும் உள்ளது

screen-shot-2016-11-25-at-14-32-42பெரும்பான்மையினருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் சிறுபான்மையினருக்கும் உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று(25) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாங்கள் விகாரைகளை அமைக்கவிடாமல் செய்து இனவாதத்தை தூண்டுவதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் நாங்கள் இனவாதத்தை தூண்டவில்லை. பெரும்பான்மையினருக்கு இருக்கும் அதே அளவு உரிமை எங்களுக்கும் உள்ளது என்றுதான் கூறமுனைகிறோம்.

எங்களது நோக்கம் இனவாதத்தை தூண்டுவதல்ல. எங்களது உரிமைகள் என்னவென்று எங்களுக்குத் தெரிய வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கில் 5000 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்பட வேண்டிய நிலையிலுள்ளது. தனியார் காணிகள் தான் அதிகமாக அரசாங்கம் வசமுள்ளது.

இரணைதீவு பகுதியிலும் அதிக நிலப்பரப்பு கடற்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ளது. இந்த காணிகளில் 400 குடும்பங்கள் வரையில் உள்ளார்கள்.

இதே போன்று கிளிநொச்சியில் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள 15 காணிகள் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்ட போதிலும் கூட இன்னமும் விடுவிக்கப்படவில்லை. அவை விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுருத்தினார்.

மேலும், வலி.வடக்கில் 6000 ஏக்கர் வரையிலான காணிகள் விடுவிக்கப்பட வேண்டிய நிலையிலுள்ளது. இங்கு பல கோயில்களும் பூட்டப்பட்ட நிலையிலுள்ளன, இதனால் அப்பகுதி மக்கள் தங்களது மத வழிபாடுகளைக் கூட சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது என சுட்டிக்காட்டினார்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.