(Vedio) துயிலும் இல்லங்கள் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் – விஜயகலா மகேஸ்வரன்

2e3e116a1_xlபடையினர் வசம் உள்ள வடக்கில் துயிலும் இல்லங்கள் காணிகள் அவற்றின் உரிமையாளர்களான பொது மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று காணியமைச்சுக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றினார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேலும் உரையாற்றுகையில்:

kala

வலி வடக்கில் படையினர் வசமுள்ள 6000 ஏக்கர் காணிகளை அரசாங்கம் உரிய மக்களுக்குக் கையளிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கிளிநொச்சிப் பரவிப்பாஞ்சான் மக்களுக்கு அரசாங்கம் காணிகளை மீள கையளிப்பதற்காக வழங்கிய கால அவகாசம் எதிர்வரும் 8 ம் திகதியுடன் நிறைவடைகிறது.

அரசாங்கம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் 15 குடும்பங்கள் தமது காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அங்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடிய போதும் அம்மக்கள் தமது போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டனர்.

அதனையடுத்து நான் பாதுகாப்புச் செயலாளருடன் பேசி மூன்று கால அவகாசம் தருமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டேன்.

அந்த மூன்று மாத கால அவகாசம் எதிர்வரும் 8 ஆம் திகதியுடன் நிறைடைகிறது.

விரைவில் அக்காணிகள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *