நெடுந்தீவுக்கான சேவையை ஆரம்பித்தது நெடுந்தாரகை

யாழ்.நெடுந்தீவுக்கான நெடுந்தாரகை படகுச்சேவை இன்றுமுதல் குறிகாட்டுவானிலிருந்து மாகாண சபைகள் மற்றும்உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண பிரம செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைசி கட்சிசன், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் , வடக்குமாகாண சபை உறுப்பினர், மற்றும் கடற்படை அதிகாரிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சேவையில் ஈடுபடுவதற்காக உலக வங்கியின் நிதிப் பங்களிப்பில் நெல்சிப் திட்டத்தின் கீழ் 150 மில்லியன் ரூபா செலவில் இந்த நெடுந்தாரகை படகு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் 80 பயணிகள் பயணிக்கக்கூடிய போதிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது இதற்கான இயந்திரமும் இந்தி யாவில் இருந்து தருவிக்கப்பட்டு குறித்த படகினில் பொருத்தப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

நெடுந்தீவு மற்றும் குறிகாட்டுவான் மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கமைய இச்சேவை, பூர்த்தி செய்யப்பட்டுளமை குறிப்பிட த்தக்கது.

16195092_908178059319729_7418302006514329143_n

16194871_908166832654185_106322801941701749_n

16195740_908167215987480_7004691810082504044_n

16195389_908178099319725_3906726649598560288_n

16142764_908178125986389_7341907548739486762_n

16114269_908178169319718_7486891359643812407_n

16174781_908178202653048_8672040307777311669_n

16105697_908178252653043_5666054319026623722_n

16105825_908178275986374_7945253458734993155_n

16105783_908166792654189_5443183783443599850_n

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.