News First ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகத்தின் மீது தாக்குதல்!

கொழும்பில் உள்ள News First ஊடகத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப்பிரேரணையின் வாக்கெடுப்பின் பின்னரேயே இந்த அசம்பாவிதம் இடம் பெற்றுள்ளது.

கொழும்பு பிறேபுரூக் பிளேஸில் அமைந்துள்ள News First ஊடக வலையமைப்பின் தலைமை நிறுவனங்களான எம்.டி.வி – எம்.பி.சி. ஊடக வலையமைப்பின் தலைமையகத்தை சுற்றிவளைத்த குழுவினர் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில். அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.