ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் புதிய இலங்கை வதிவிட பிரதிநிதி

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் புதிய இலங்கை வதிவிட பிரதிநிதி ஏ.எல்.ஏ.அஸிஸ், தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் புதிய இலங்கை வதிவிட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எல்.ஏ.அஸிஸ், ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் பணியாளர் சபையின் தலைமை மற்றும் பணிப்பாளர் நாயகமாக Director General Mr. Møller மைக்கல் மொலரை சந்தித்து சான்று பத்திரத்தை கையளித்துள்ளார்.

புதிய வதிவிட பிரதிநிதியை மகிழ்ச்சியுடன் வரவேற்ற பணிப்பாளர் நாயகத்திடம் ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா அலுவலகத்தின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் சில பணிகள் குறித்து புதிய வதிவிடப் பிரதிநிதி தெளிவுபடுத்தினார். நிலைபேறான அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு இணக்கப்பாட்டு ஆய்வு அறை ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் சமநிலை திட்டம் மற்றும் உரிமை தொடர்பான மூலோபாய விடயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இவற்றின் முன்னேற்றத்திற்காக பங்களிப்பு வழங்கப்படுவதுடன் இலங்கை, ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதங்களை கலைதல் தொடர்பாக வேலைத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்குமாறு பணிப்பாளர் நாயகம் கோரிக்கை விடுத்தார். இலங்கை அரசாங்கம் நிலைபேறான அபிவிருத்தி இலக்கை பூர்த்தி செய்ய முன்னெடுத்துள்ள திட்டத்தை விபரித்த வதிவிட பிரதிநிதி, ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்ந்து புரிந்துணர்வுடனும் பயனுள்ள உரையாடலின் மூலம் இலங்கை மக்களின் நலன்களை மேம்படுத்துவதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் புதிய இலங்கை வதிவிட பிரதிநிதி தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *