அநுராதபுரம் நகரிலுள்ள கதிரேசன் கோயிலில் இன்று கொடியேற்றம்

அநுராதபுரம் நகரிலுள்ள கதிரேசன் கோயிலில் இன்று கொடியேற்றம் .

ஆனால் எம்மவர்கள் எத்தனை பேர் இக்கோயிலுக்கு சென்றிருப்பர் ?

விழுந்து விழுந்து கோயிலுக்கு செல்கின்ற பக்தி முக்தர்கள் கூட இவ்வாறான சிங்களவர்கள் நிறைந்த , எல்லைக்கிராமங்களிலுள்ள கோயில்களுக்கு செல்வது மிக அரிது .

முழுக்க முழுக்க தமிழர்களே நிறைந்து காணப்படக்கூடிய பிரதேசங்களில் வைரவருக்கு கூட கோடிக்கணக்கான ரூபாயில் பிரமாண்ட மண்டபங்களை எழுப்புகின்ற நாம் இவ்வாறான பாதுகாக்கபடவேண்டிய வழிபாட்டு தலங்களை கண்டுகொள்வதேயில்லை .

கோயில்கள் மாத்திரமல்ல அனுராதபுரம் போன்ற பகுதிகளில் இன்றும் காணப்படக்கூடிய தமிழ்மொழி மூலப் பாடசாலையான விவேகானந்தா வித்தியாலயம் போன்றவையும் பாதுகாக்கப்படவேண்டியவை + கண்ணும் கருத்துமாக பராமரிக்கப்படவேண்டியவையே.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.