மலேசியா சிறையில் உயிரிழந்த முன்னாள் போராளி ஜீட் மயூரன்

மலேசியாவில் மரணமடைந்த இலங்கை அகதி,  முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச சபைக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஜீட் மயூரன் , மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் மூன்றாம் தரப்பு நாட்டிற்கு செல்ல முயன்றபோது கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில்  மலேசிய குடிவரவு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்  மரணமடைந்துள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர்  மலேசியாவிற்கு சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது..

இதேவேளை  ஜீட் மயூரனிற்கு   மூச்சுத் திணறல் பிரச்சினைகள் இருந்ததாகவும் அதுவே அவரது மரணத்துக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.