மன்னாரில் புதிதாக கழுதைகள் மருத்துவமனை

தனியார் நிறுவனம் ஒன்றின் அனுசரனையுடன், தாயிலான் குடியிருப்பு மக்களும் இணைந்து மன்னாரில் புதிதாக நிர்மாணித்துள்ள கழுதைகள் மருத்துவமனை மற்றும் கல்வி மையம் இன்று (21) காலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, சின்னக்கரிசல், தாயிலான் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட கழுதைகள் மருத்துவமனை மற்றும் கல்வி மையம் ஆகியவையே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதம விருந்தினராக உலக மிருகங்கள் பாதுகாப்பு அமையத்தின் பிரதிநிதி ஒட்டார குணவர்த்தன கலந்து கொண்டதோடு, விருந்தினர்களான மன்னார் பிரதேச சபையின் தலைவர் முஹமட் முஜாகிர், உறுப்பினர்கள், நகர சபையின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மன்னாரில் காயமடைந்த மற்றும் புறக்கணிக்கப்பட்ட கழுதைகளை பராமரிக்கும் இடமாக புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கழுதைகள் மருத்துவமனை மற்றும் கல்வி மையம் அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.